புத்தாண்டுக்கு புது ஸ்மார்ட் டிவி வாங்கனுமா...? ரூ.10 ஆயிரத்திற்குள் பக்காவா வாங்கலாம்!

32 Inch Smart TV: அமேசானில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ரூ.10 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கின்றன. அதன் தள்ளுபடி விவரங்களையும் இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 10, 2023, 12:03 PM IST
  • 32 இன்ச் ஸ்மார்ட் டிவி என்பது பட்ஜெட் விலையில் கிடைக்கும்.
  • சிட்டி பேங்க் கார்டுகளுக்கு தள்ளுபடி உண்டு.
  • இதனை மாதத் தவணையிலும் கேட்கலாம்.
புத்தாண்டுக்கு புது ஸ்மார்ட் டிவி வாங்கனுமா...? ரூ.10 ஆயிரத்திற்குள் பக்காவா வாங்கலாம்!  title=

32 Inch Smart TV: இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் பல நிறுவனங்களின் தயாரிப்புகள் பல்வேறு விலைகளில் கிடைக்கிறது. ரெட்மி, ரியல்மி, சாம்சங் முதல் ஒன்பிளஸ் வரை பல முன்னணி நிறுவனங்கள் பல்வேறு அளவுகளில் ஸ்மார்ட் டிவிகளை வழங்குகின்றன. 

நீங்கள் ஷோ ரூம்களில் மட்டுமில்லாமல் இ-காமர்ஸ் இணையதளமான அமேசானில் இருந்தும் ஸ்மார்ட் டிவிகளை குறைந்த விலையிலும் தள்ளுபடியிலும் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. வர இருக்கும் புத்தாண்டை முன்னிட்டு நீங்களும் உங்கள் வீட்டிற்கு புதிய ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என நினைத்தால், இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

32 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் தற்போது இந்திய குடும்பங்களில் அதிகம் காணப்படும் பொருளாகும். 42 இன்ச், 65 இன்ச் என பெரிய சைஸ்களில் கிடைத்தாலும் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி என்பது பட்ஜெட் விலையில் இருக்கும். அந்த வகையில், ரூ.10 ஆயிரத்தில் உள்ள 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | 53% தள்ளுபடியில் 55 இன்ச் டிவி... வீட்டிலேயே பெரிய ஸ்கிரீனில் படம் பார்க்கலாம்!

Acer 32 Inch I Series HD

இந்த ஸ்மார்ட் டிவி 1366 x 768 பிக்சல் ரெஸ்சோல்யூஷன் மற்றும் 60Hz புதுப்பிப்பு ரேட் (Refresh Rate) கூடிய காட்சியைக் கொண்டுள்ளது. டிவியில் 2 USB மற்றும் 2 HDMI போர்ட்கள் உள்ளன. ஸ்மார்ட் டிவி 1.5ஜிபி RAM மற்றும் 8ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூ-ட்யூப், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பல செயலிகளை காணலாம். ஸ்மார்ட் டிவியின் விலை 10 ஆயிரத்து 999 ரூபாய். இருப்பினும், இதில் 1250 ரூபாய் வரை தள்ளுபடி உள்ளது. இதன் காரணமாக 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வாங்க முடியும். மேலும், 533 ரூபாய் மாத தவணையிலும் டிவி கிடைக்கிறது.

VW 32 Inch Frameless Series

இந்த ஸ்மார்ட் டிவி 1366×768 பிக்சல் ரெஸ்சோல்யூஷன் மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் 32 இன்ச் HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிவியில் 2 HDMI மற்றும் 2 USB போர்ட்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட் டிவியில் சக்திவாய்ந்த ஸ்டீரியோ அவுட்புட் மற்றும் மியூசிக் ஈக்வலைசர் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட் டிவியின் விலை 6 ஆயிரத்து 999 ரூபாயாகும். சிட்டி பேங்க் கார்டுகளுக்கு 1250 ரூபாய் வரை தள்ளுபடி உண்டு. மாதாந்திர தவணையாக 339 ரூபாயில் வாங்கலாம். 

Kodak 32 Inch Special Edition Series

இந்த 32 இன்ச் ஸ்மார்ட் டிவி சோனில் லிவ், யூ-ட்யூப்,  அமேசான் பிரைம், Zee5, Eros Now போன்ற பல செயலிகளை பயன்படுத்தலாம். அதன் காட்சியின் பிக்சல் ரெஸ்சோல்யூஷன் 1366 x 768 மற்றும் புதுப்பிப்பு வீதம் 60Hz ஆகும். இந்த டிவியில் 3 HDMI மற்றும் 2 USB போர்ட்கள் உள்ளன. ஸ்மார்ட் டிவியில் உள்ளமைக்கப்பட்ட வைஃபை, 4ஜிபி RAM மற்றும் 512ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் உள்ளது. ஸ்மார்ட் டிவியின் விலை 8 ஆயிரத்து 999 ரூபாயாகும். அமேசானில் இருந்து 436 ரூபாய்க்கு வீட்டிற்கு கொண்டு வரலாம். சிட்டி பேங்க் கார்டுகளுக்கு 1250 ரூபாய் வரை தள்ளுபடி உண்டு.

மேலும் படிக்க | பிளிப்கார்ட் பத்திக்கிச்சே..! ஐபோன் 14 சீரிஸூக்கு எக்சேஞ்ச் போன்ஸ் வாரி வழங்கியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News