’யூடியூபர்களுக்கு வரப்பிரசாதம்’ DSLR கேமராவுக்கு இணையான குவாலிட்டி கொடுக்கும் ஸ்மார்ட்போன்

டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு இணையான கேமரா குவாலிட்டியைக் கொடுக்கும் ஸ்மார்ட்போன் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 14, 2022, 01:12 PM IST
  • யூ டியூபர்களுக்கு சூப்பரான கேமரா
  • டிஎஸ்எல்ஆர்-க்கு இணையானது
  • இந்த ஸ்மார்ட்போனை வாங்குங்கள்
’யூடியூபர்களுக்கு வரப்பிரசாதம்’ DSLR கேமராவுக்கு இணையான குவாலிட்டி கொடுக்கும் ஸ்மார்ட்போன்  title=

கொரோனா காலத்தில், தங்களிடம் இருக்கும் கேமராவைக் கொண்டு யூடியூபராக மாறியவர்கள் ஏராளம். வித்தியாசமான கன்டென்டுகள், வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் உள்ளிட்டவைகள் எல்லாம் படம் பிடிக்கப்பட்டு சேனல்களில் பதிவேற்றினர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த கேமரா குவாலிட்டி இல்லை. தொழில்முறை கேமரா வாங்குவதற்கும் அவர்களிடம் பட்ஜெட் இல்லை. இதனால், கவலை கொண்டவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு இணையான கேமரா குவாலிட்டியை கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம். 

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான யூடியூப்பர்களின் கேமராவாக ஐபோன் இருக்கிறது. இதில் எடுக்கப்படும் குவாலிட்டி வீடியோ மூலம் லட்சக்கணக்காக சம்பாதிக்கின்றனர். டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு இணையாக ஐபோன் சிறந்தது ஏன்? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க | ஆதார் தொலைபேசி எண்ணை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி? 

ஐபோன் கேமரா குவாலிட்டி ஸ்பெஷல்

* தூசி நிறைந்த, மேகமூட்டமான அல்லது மழை காலநிலையில் கூட ஐபோன் மூலம் புகைப்படம் எடுக்கலாம்.

* ஐபோன் பயன்படுத்த எளிதானது, வசதியானது மற்றும் எடுத்துச் செல்லக்கூடியது என்பதால், நீங்கள் பயணத்தின்போது ஐபோனைப் பயன்படுத்தலாம்.

* பனோரமா, ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ், லைவ் ஃபோட்டோ மற்றும் போர்ட்ரெய்ட் மோட்கள் அனைத்தும் பயன்படுத்த எளிதான அம்சங்களாகும்.

* ஐபோன் ஜூம் இன் மற்றும் ஜூம் அவுட் அம்சத்தைக் கொண்டிருப்பதால் கனமான கேமரா மற்றும் பல லென்ஸ்கள் எடுத்துச் செல்ல வேண்டிய           அவசியமில்லை.

* லைட் கேப்சரிங் சென்சார்- ஐபோன் லைட் கேப்சரிங் சென்சார் கொண்டது, இது வீடியோக்களை தெளிவாகவும் நல்ல தரமாகவும் மாற்றுகிறது.

* ஐபோன் 4K 10-பிட் HDR செல்போன் வீடியோவை பதிவு செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

* iPhone இல் (iPhone) வீடியோ கோப்பின் அளவு சிறியதாக இருப்பதால் அதிக இடம் கிடைக்கும்.

* டிஎஸ்எல்ஆர்களை விட ஐபோன்களின் விலை கணிசமாகக் குறைவு. நீங்கள் ஒரு லென்ஸ் கூட வாங்க வேண்டியதில்லை.

மேலும் படிக்க |ஆன்லைனில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News