விற்பனையில் சாதனை: ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன்!

ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் அமேசானில் விற்பனைக்கு விடப்பட்ட 5 நிமிடங்களில் முழுவதுமாக விற்று முடிந்து சாதனை. 

Last Updated : Nov 25, 2017, 03:15 PM IST
விற்பனையில் சாதனை: ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன்! title=

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் ஒன்பிளஸ் 5T என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

நேற்று இரவு முன்னோட்ட விற்பனையாக அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் 1மணி நேரம் மட்டும் விற்பனைக்கு விடப்பட்டது. ஆனால், விற்பனைக்கு விடப்பட்ட 5 நிமிடத்திலேயே அனைத்து போன்களும் விற்பனை ஆகிவிட்டதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முதல் விற்பனையில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, நவம்பர் 28-ம் தேதி முதல் மீண்டும் இந்தியாவில் ஒன்பிளஸ் 5T விற்ப்பனைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும், 6 ஜிபி ரேம், 64-ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன்னின் விலை ரூ.32,999 என இந்தியாவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 8-ஜிபி ரேம், 128-ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.37,999-க்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைக் கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.1,500 உடனடி தள்ளுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனை வாங்க பொதுமக்கள் மத்தியில் அதிக ஆர்வம் நிலவுகிறது.

Trending News