செல்போன் இல்லாத வாழ்க்கையை இன்று நினைத்து பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்தால் நிச்சயம் முடியாது என்ற பதில் வரும். ஆனால், எந்தவொரு தொழில்நுட்பத்திற்கும் மறுபக்கம் என ஒன்று உள்ளது.
இதைப் பற்றி சில காலமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஸ்மார்ட்போன்களின் அவசியம், அதன் தீங்குகளை பின்தள்ளிவிட்டது.
உண்மையில், ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு மிகவும் தீங்கு விளைவிக்கிறது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய எந்த உறுதியான ஆராய்ச்சியும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இருப்பினும், என்ன ஸ்மார்ட்போன்கள் அதிக கதிர்வீச்சை வெளியிடுகின்றன என்பதை அறிவது பயனுள்ளதாக இருக்கும். எனவே, ஸ்மார்ட்போன் மற்றும் கதிரியக்கம் கொண்ட பொருட்களின் பயன்பாடு குறித்த ஐயங்கள் அவ்வப்போது வெளியாகும், அதற்கான விளக்கங்களும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவதும் இயல்பானதாகிவிட்டது.
Galaxy Note 10 5G, Samsung A 80, Axon Elite உட்பட சில ஸ்மார்ட்போன்களில் குறைந்த அளவு கதிர்வீச்சு வெளியாகிறது.
ஸ்மார்ட்ஃபோன்கள் நமது வாழ்க்கைக்கான தொழில்நுட்பக் கருவியாக இருந்தாலும், அவற்றை ஸ்மார்ட்டாக செலக்ட் செய்து பயன்படுத்த வேண்டும். அதற்க்கு அதுகுறித்த தகவல்களும் தரவுகளும் தேவை.
தற்போது, கதிரியக்க பாதுகாப்புக்கான ஜெர்மன் ஃபெடரல் அலுவலகம் வெளியிட்ட ஒரு பட்டியலில், நாம் மொபைலில் பேசும்போது, குறைந்த கதிர்வீச்சை வெளியிடும் உலகின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் Apple, Google, Huawei, LG, Motorola, OnePlus, Oppo, Samsung, Xiaomi, Sony போன்ற பெயர்கள் உள்ளன. இதோ, உங்களுக்கு பாதுகாப்பான ஸ்மார்போன்களின் பட்டியல்...
நமது வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட கைப்பேசிகள், ஸ்மார்ட்டாக மாறிவிட்டன. அவை ஸ்மார்ட்போன் என்ற வடிவில் எப்போதும் நம்முடனே ஒன்றிப்போய்விட்டன.
ஆனால், இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியிடும் கதிரியக்கங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல.
கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட்போன்களும் குறைந்தபட்சம் ஒரு சிறிய அளவிலான கதிர்வீச்சை வெளியிடுகின்றன, அது உங்களுக்கு ஏதேனும் உடல் தீங்கு விளைவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
ALSO READ | உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் இவை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR