Independence Day offer: Jio நிறுவனத்தின் சுதந்திர தின சலுகையின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோஃபை 4 ஜி வயர்லெஸ் (JioFi 4G) ஹாட்ஸ்பாட்டை வாங்குவதன் மூலம் ஐந்து மாதங்கள் வரை இலவச தரவு மற்றும் ஜியோ-டு-ஜியோ அழைப்புகளை வழங்குகிறது. ஜியோஃபை விலை ரூ. 1,999. இந்த சலுகையைப் பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் முதலில் JioFi க்காக இருக்கும் திட்டங்களில் ஒன்றை வாங்க வேண்டும்.
ஜியோஃபை ஹாட்ஸ்பாட் (JioFi hotspot) ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரிலிருந்து (Reliance Digital) வாங்கிய பின்னர், அதில் ஜியோ சிம் செயல்படுத்தப்பட்ட பிறகு, வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கக்கூடிய மூன்று ஜியோஃபை திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். அதன் பிறகு அந்த திட்டம் அடுத்த ஒரு மணி நேரத்தில் செயல்படுத்தப்படும்.
ALSO READ | அட்டகாசமான அம்சங்களுடன் களமிறங்கும் JioPhone 5.... விலை ₹.500-க்கும் குறைவு...
அதில் உள்ள சில திட்டங்களை பார்ப்போம்:
மிகவும் மலிவு சலுகை ரூ. 199 திட்டமாகும். இது தினசரி 1.5 ஜிபி தரவை அளிக்கிறது மற்றும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். நீங்கள் ஜியோ பிரைம் உறுப்பினர் பெற கூடுதலாக ரூ. 99 செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் 1.5 ஜிபி, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், ஜியோ அல்லாதா மற்ற மொபைல் நெட்வொர்க் 1000 நிமிடங்கள் ஒவ்வொரி 28 நாட்களுக்கும் கிடைக்கும். மற்றும் 140 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைக்கும்
ALSO READ | ஏர்டெல் Vs ஜியோ Vs வோடபோன்: 84 நாட்கள் ரீசார்ஜ் திட்டத்தில் சிறந்தது எது..!
இரண்டாவது சலுகை ரூ. 249, இது 28 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி தரவை வழங்குகிறது. இங்கேயும் ஜியோ பிரைம் உறுப்பினர் பெற கூடுதலாக ரூ. 99 செலுத்த வேண்டும். ஜியோ-டு-ஜியோ வரம்பற்ற அழைப்பும் மற்றும் ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்கில் அழைக்க 1000 நிமிடங்கள் 28 நாட்களுக்கு கிடைக்கும் ஒரு நாளைக்கு 100 தேசிய எஸ்எம்எஸ் 112 நாட்களுக்கு கிடைக்கும்.
மூன்றாவது விருப்பம் ரூ. 349, மற்றும் 28 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி வழங்குகிறது. ரூ. 99 கூடுதலாக செலுத்தினால் நீங்கள் ஜியோ பிரைம் உறுப்பினர் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி தரவு, நாட்களுக்கு வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள், 1,000 நிமிட மற்ற மொபைல் நெட்வொர்க் அழைக்க வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் 84 நாட்களுக்கு கிடைக்கும்.