Redmi Note 10s Launch: சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் சியோமி இன்று ரெட்மி நோட் 10 தொடரின் மற்றொரு ஸ்மார்ட்போனான Redmi Note 10S-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்த தொடரின் மலிவான ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த தொலைபேசியுடன் Xiaomi இந்தியாவில் ரெட்மி வாட்சையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
Redmi Note 10s -ன் விலை
6 ஜிபி ரேம் + 64 ஜிபி - ரூ .14,999
6 ஜிபி ரேம் + 128 ஜிபி - ரூ .15,999
Redmi Note 10s-ன் அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone) 6.43 இன்ச் சூப்பர் அமோலேட் எஃப்.எச்.டி + டாட் நாட்ச் ஃபீச்சர் டிஸ்பிளே உள்ளது. டிஸ்பிளேவில் 180Hz இன் டச் சேம்பிளிங் ரேட் உள்ளது. மேலும் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸும் உள்ளது.
Redmi Note 10s மீடியா டெக் ஹீலியோ ஜி 95 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக தொலைபேசியின் ஸ்டோரேஜை அதிகரிக்கலாம்.
இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் சக்திவாய்ந்த பேட்டரி உள்ளது. இந்த தொலைபேசி 33W வேகமான சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கிறது.
MIUI 12.5 ஐ அடிப்படையாகக் கொண்ட Android 11 இயக்க முறைமையுடன் பொருத்தப்பட்டுள்ள சியோமியின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும் இது. இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது.
Redmi Note 10s-ன் பின்புறத்தில் க்வாட் பின்பக்க கேமரா உள்ளது. இதில் 64 எம்.பி முதன்மை கேமரா மற்றும் 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி கேமரா கொண்ட அமைப்பு உள்ளது. செல்பிக்கு 13 எம்.பி கேமராவும் இதில் உள்ளது.
Redmi Note 10s-ஐ எப்போது வாங்க முடியும்
புதிய ஸ்மார்ட்போன் Redmi Note 10s-ன் முதல் விற்பனை அமேசான் (Amazon) இந்தியா மற்றும் எம்ஐ ஸ்டோரில் மே 18 மதியம் 12 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த நாளில் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
ரெட்மி வாட்சும் அறிமுகம் ஆனது
Mi Fans, our wait is finally over!
Grab the brand new #RedmiWatch on sale on the th of May at noon exclusively on https://t.co/pMj1r7lwp8 and Flipkart.
Get ready to #WearYouVibe!
I #Redmi pic.twitter.com/GI0ZChYxT5
— Manu Kumar Jain (@manukumarjain) May 13, 2021
இது மிகவும் சிறப்பு வாய்ந்த வாட்ச் ஆகும். இதன் விலை ரூ .39999. இதை நீங்கள் மே 25, 2021 அன்று நண்பகல் 12 மணி முதல் mi.com மற்றும் பிளிப்கார்ட்டில் வாங்கலாம். இந்த வாட்சில் நாம் ஸ்டெப்ஸ் கவுண்ட், கலோரி எண்ணிக்கை, இசை கட்டுப்பாடு, அலாரம் மற்றும் போனைக் கண்டுபிடிக்க உதவும் ஃபைண்ட் மை ஃபோன் போன்ற அம்சங்கள் உள்ளன.
இது தவிர, இதில் நீங்கள் அறிவிப்புகள் (னோடிஃபிகேஷன்), இலக்கு அமைப்புகள் (கோல் செட்டிங்ஸ்), கால் சைலன்ஸ் அல்லது ரிஜக்ட் மற்றும் வானிலை நிலவரம் போன்ற அம்சங்களையும் அனுபவிக்க முடியும்.
ALSO READ: Samsung 7000mah பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோனில் எக்கச்சக்க சலுகைகள்: மிஸ் பண்ணிடாதீங்க
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR