சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் சியோமி இன்று (செவ்வாய்) இந்தியாவில் தனது புதுரக ரெட்மி 4A புதிய வேரியன்ட் ஸ்மார்ட்போனினை அறிமுகப்படுத்தினார்.
சியோமி ரெட்மி 4A புதிய வேரியன்ட், மாறுபட்டு திறன்களுடன் வெளிவந்துள்ளது, அதன்படி 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு திறனுடன் ஆகஸ்ட் 31 (வியாழக்கிழமை) முதல் சந்தைகளில் கிடைக்கும் என அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த மொபைலினை mi.com, ப்ளிப்கர்ட், அமேசான் இந்தியா, பெடிஎம் மற்றும் டாடா க்ளிக் ஆகியவற்றில் முன்பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம்.
ரெட்மி 4A புதிய வேரியன்ட் விலை ரூ 6,999 ஆகும். முன்னதாக சியோமி ரெட்மி 4A முதன் முதலில் மார்ச் மாதம் 5,999 ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த புது வரவு குறித்து சியோமியின் இந்தியா துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மானு குமார் ஜெயின் ட்வீட் செய்துள்ளார்:
Get your Redmi 4A (3GB + 32GB) on https://t.co/lzFXOcGyGQ, @Flipkart, @amazonIN, @PayTM, @TataCLiQ & #MiHome starting 31st Aug! (2/2) pic.twitter.com/PGKADqeuyv
— Manu Kumar Jain (@manukumarjain) August 29, 2017
ரெட்மி 4A புதிய வேரியன்ட் சில சிறப்பம்சங்கள்:-
5-அங்குல ஐபிஎஸ் எல்சிடி திரை
HD ரெசல்யூசண் (720p)
குவால்காம் ஸ்னாப் 420 64 பிட் செயலி
3 ஜிபி ரேம்
32 ஜிபி சேமிப்பு
13 எம்.பி. பின்புற கேமரா
5 எம்.பி. முன் கேமரா
3120mAh பேட்டரி
4 ஜி இரட்டை சிம்
VoLTE ஆதரவு