பெப்சி நிறுவனத்தின் CEO இந்திரா நூயி அக்டோபர் மாதம் பதவி விலகுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது!
கடந்த 12 ஆண்டுகளாக பெப்சி நிறுவனத்தின் CEO பொறுப்பில் இருந்து வரும் இந்திரா நூயி அப்பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக பெப்சிகோ இன்க் தெரிவித்துள்ளது. இந்திரா நூயி வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி பதவி விலக உள்ளதாகவும் பெப்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், பிரசிடண்ட் ராமோன் லகுவார்டா புதிய CEO-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுலதாகவும் பெப்சிகோ இன்க் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
After 12 years as CEO, Indra K. Nooyi will step down on Oct 3, 2018: PepsiCo pic.twitter.com/hz5Ddd2e4Y
— ANI (@ANI) August 6, 2018
கடந்த 2014 ஆம் ஆண்டு போர்பஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இந்திரா நூயி 13-வது இடத்திலும், 2015 ஆம் ஆண்டு பார்டியூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் 2-வது இடத்திலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!