ஓலாவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்திற்கு சிறப்பு சலுகைகளை வழங்குவது நாட்டின் நலனுக்கானது அல்ல என்று கூறியுள்ளார். ஒரு பிரபல ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர், டெஸ்லா இங்கு வந்து விற்பனை கூடங்களை அமைத்து தனது கார்களை விற்க அதற்கு அனுமதி இருக்கிறது என்றார்.
ஆனால், டெஸ்லா 2மற்ற நிறுவனங்களை விட தான் வித்தியாசமாக நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறது. இது இந்தியாவின் நலன்களுக்கு ஏற்றது அல்ல என தான் நம்புவதாகவும் அவர் கூறினார். டெஸ்லா இந்தியாவில் உற்பத்திக்கான நடவடிக்கைகளைத் தொடங்கவில்லை. டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் மே மாதம், "முதலில் டெஸ்லா தனது கார்களை விற்பனை செய்வதற்கும் கார்களுக்கான சர்வீஸ் வழங்குவதற்கும் அனுமதிக்கப்படாத எந்த இடத்திலும் டெஸ்லா தனது உற்பத்தி ஆலையை உருவாக்காது” என ட்வீட் செய்திருந்தார்.
எலான் மஸ்க்கின் டெஸ்லா இந்திய சந்தையில் நுழைய ஆர்வமாக உள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று இறக்குமதி வரிகளைக் குறைப்பதாகும். இது $40,000 (தோராயமாக ரூ. 31,60,560) விலையுள்ள மின்சார வாகனங்களுக்கு 100 சதவீதம் வரை செல்கிறது. இந்த இறக்குமதி வரி இந்தியாவை அதன் மிக விலையுயர்ந்த சந்தையாக மாற்றும் என்று டெஸ்லா கூறுகிறது. இவ்வளவு பெரிய தொகை பெரும்பாலான இந்திய நுகர்வோருக்கு காரை அணுக முடியாததாக மாற்றும். நிறுவனம் கடந்த காலங்களில் பல நிகழ்வுகளில் அனைத்து மின்சார வாகனங்களின் மீதான வரியை 40 சதவீதமாக ஒழுங்கமைக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க | பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் நியூ டொயோட்டா! ஹூண்டாய், ஸ்கோடா கலக்கம்
எனினும், அரசாங்கம், மின்சார வாகன தயாரிப்பாளருக்கு எந்த சலுகையும் வழங்க மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக, டெஸ்லாவின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த இந்திய அரசாங்கம், இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை உருவாக்க நிறுவனம் முன்வர வேண்டும் என்று கூறியது. இது, நிறுவனத்தின் இவி-களின் விலைகளை தானாக குறைக்கும் என இந்திய அரசு தெரிவித்தது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த ஆண்டு மே மாதம், இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய டெஸ்லா நிறுவனத்திற்கு மீண்டும் அழைப்பு விடுத்தார். "டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரிக்க முடிவு செய்தால், அதற்கும் பலன் கிடைக்கும்" என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அப்போது கூறியிருந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, தனது நிறுவனம் இந்தியாவில் ஆலையை அமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த மஸ்க், ‘தனது கார்களை முதலில் விற்க அனுமதி கிடைக்காத வரை, டெஸ்லா இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்யாது’ என்று கூறினார்.
டெஸ்லாவுக்கு எந்த வித சிறப்பு சலுகைகளையும் கொடுப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல என ஓலாவின் பவிஷ் அகர்வால் தற்போது தெரிவித்துள்ளார். சமீப காலங்களில் ஓலா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனக்கென தனி இடத்தை பதித்துள்ளது.
ஓலா 2010 இல் ரைட்-ஹைலிங் செயலியாக அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, டெலிவரிகள், பயன்படுத்திய கார் விற்பனை மற்றும் விற்பனை காப்பீடு போன்ற பிற துறைகளிலும் விரிவடைந்துள்ளது. ஓலா நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் ஓலா எலக்ட்ரிக் என்ற எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தை நிறுவியது. டச்சு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்டார்ட்அப் நிறுவனமான எடெர்கோவை மே 2020 இல் ஓலா வாங்கியது. இந்த டீலுக்கான தொகை பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஓலா தற்போது இந்தியாவின் மிகப்பெரிய மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பாளராக உள்ளது. இதன் மொத்த விற்பனை 50,000 ஆகும். மின்சார வாகனங்கள் துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுக்கு ஓலா நிறுவனம் வலுவான போட்டியை அளித்து வருகிறது.
ஓலா தனது முதல் ரீச்சார்ஜபிள் ஸ்கூட்டர்களை டிசம்பர் 2021 இல் டெலிவரி செய்யத் தொடங்கியது. ஜூலை மாதத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்தனர். ஆனால் மார்ச் மாதம் ஒரு ஸ்கூட்டர் தீப்பிடித்ததை அடுத்து, ஓலா 1,400 ஸ்கூட்டர்களை திரும்பப் பெற்றது. இருப்பினும், இந்த சம்பவம் ஒரு பிரத்யேகமான சம்பவம் என்றும் பொதுவான பிரச்சனை அல்ல என்றும் அகர்வால் கூறினார்.
மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இப்படி நடக்கும் என்றும் மற்ற மின்சார வாகனங்களிலும் இப்படி நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மின்சார ஸ்கூட்டர் தீ விபத்து தொடர்பாக மார்ச் மாதம் தொடங்கப்பட்ட அரசு விசாரணைக்கு ஓலா ஒத்துழைப்பதாகவும் அவர் குறிப்பொட்டார். கடந்த அக்டோபரில் ஓலாவின் தலைமை இயக்க அதிகாரி உட்பட, குழுமத்தின் சில உயர்மட்ட அதிகாரிகள் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்கள்.
இது குறித்து பேசிய பவிஷ் ஆர்வால், "எங்கள் நிறுவனங்களில் நாங்கள் மிகவும் வலுவான நிர்வாகப் பிரிவைக் கொண்டுள்ளோம்" என்று கூறினார். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதால், தொழில்நுட்ப மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்ததாகவும், அதனால், ஓலாவின் பொதுப் பங்கீட்டுக்கான திட்டங்களில் சிறிய பின்னடைவு ஏற்படுள்ளதாகவும் அவர் கூறினார்.
தோராயமாக அடுத்த ஒரு ஆண்டு கால அளவில், ஐபிஓ வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றும், ஆனால், அது சந்தையின் ஸ்திரத்தன்மையை சார்ந்து இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | மாருதி பிரெஸ்ஸாவுக்கு டஃப் கொடுக்கும் ஹூண்டாய், கியா! விலை மற்றும் முழு விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR