Ola Electric scooter: இந்த தேதியில் விநியோகம் தொடங்கும், முக்கிய அம்சங்கள் இவைதான்

ஓலா தனது முதல் மின்சார ஸ்கூட்டர் தொடரான ஓலா எஸ் 1 சீரிசை 15 ஆகஸ்ட் 2021 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஓலா மின்சார ஸ்கூட்டர், ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ என்ற இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2021, 12:32 PM IST
  • ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், S1 ஸ்கூட்டரின் விலை ரூ .99,999-லும், S1 Pro-வின் விலை ரூ .1,29,999 லும் தொடங்குகிறது.
  • ஓலா எஸ் 1 இல் பிசிக்கல் சாவி இல்லை, டிஜிட்டல் கீ அம்சத்துடன் இது தொலைபேசியுடன் இணைகிறது.
  • இதில் முன்புறத்திலும் பின்புறத்திலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 'ஹில் ஹோல்ட்' அம்சமும் உள்ளன.
Ola Electric scooter: இந்த தேதியில் விநியோகம் தொடங்கும், முக்கிய அம்சங்கள் இவைதான் title=

ஓலா தனது முதல் மின்சார ஸ்கூட்டர் தொடரான ஓலா எஸ் 1 சீரிசை 15 ஆகஸ்ட் 2021 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஓலா மின்சார ஸ்கூட்டர், ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ என்ற இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. Ola S1 ஸ்கூட்டருக்கான அதிகாரப்பூர்வ விற்பனை 2021 செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்கும் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 1,000 நகரங்களில் ஓலா, ஸ்கூட்டர்களை விநியோகிக்கத் தொடங்கும்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் (Ola Electric Scooter) , S1 ஸ்கூட்டரின் விலை ரூ .99,999-லும், S1 Pro-வின் விலை ரூ .1,29,999 லும் தொடங்குகிறது. மானியங்களைக் கொண்ட மாநிலங்களில், ஓலா எஸ் 1 பல பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். உதாரணமாக, டெல்லியில் மாநில மானியத்திற்குப் பிறகு, எஸ் 1 ஸ்கூட்டரின் விலை வெறும் 85,099 ரூபாயாகவும், குஜராத்தில் 79,999 ரூபாயாகவும் உள்ளது. ரூ. 2,999 ரூபாயில் தொடங்கும் EMI திட்டத்திற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் நிறுவனம் இணைந்துள்ளதாக ஓலா எலக்ட்ரிக் தெரிவித்துள்ளது.

Ola S1 ஸ்கூட்டர் சிவப்பு, வான் நீலம், மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய ஐந்து வண்ணங்களில் கிடைக்கும். Ola S1 Pro, சிவப்பு, வான் நீலம், மஞ்சள், வெள்ளி, தங்கம், இளஞ்சிவப்பு, கருப்பு, கடற்படை நீலம், சாம்பல் மற்றும் வெள்ளை ஆகிய 10 வண்ணங்களில் கிடைக்கும்.

Ola S1 மற்றும் Ola S1 Pro சாடின், மேட் மற்றும் பளபளப்பான பினிஷில் கிடைக்கும். ஓலா எஸ் 1, ஐகானிக் ட்வின் ஹெட்லேம்ப்கள், எர்கோனாமிக் மற்றும் ஃப்ளூயிக் பாடி, உயர் ரக அலாய் வீல்கள், செதுக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்கும் அளவிலான மிகப்பெரிய பூட் ஸ்பேஸ் ஆகியவற்றுடன் வரும்.

ALSO READ: Ola Electric Scooter vs Simple One: எந்த ஸ்கூட்டர் சிறந்தது? முழு ஒப்பீடு இதோ!!

181 கிமீ தூரம், 3.0 வினாடிகளில் 0-40 கிமீ வேகம், 115 kmph டாப் ஸ்பீட் ஆகியவற்றுடன் இந்த மின்சார ஸ்கூட்டர் புதிய எல்லைகளைத் தொட்டுள்ளது. இது 3.97 கிலோவாட் பேட்டரி திறன் கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இருக்கும் மின்சார வாகனத்தின் திறனை விட இது 30% அதிகமாகும். மேலும் 8.5 கிலோவாட் உச்ச சக்தி கொண்ட பிரிவில் இது மிகவும் சக்திவாய்ந்த மோட்டார் ஆகும். ஓலா எஸ் 1 ஸ்கூட்டரில் Battery Management System (BMS) என்ற நவீன அம்சமும் உள்ளது.

ஓலா எஸ் 1 இல் (Ola S1) பிசிக்கல் சாவி இல்லை. டிஜிட்டல் கீ அம்சத்துடன் இது தொலைபேசியுடன் இணைகிறது. ஓட்டுனர் அருகில் இருப்பதை ஸ்கூட்டர் தானாகவே தெரிந்து கொண்டு அன்லாக் ஆகும். ஓட்டுனர் விலகிச் சென்றால் தானாகவே லாக் ஆகி விடும். இது, மல்டி மைக்ரோஃபோன் அரே, AI பேச்சு அங்கீகார வழிமுறைகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 7-இஞ்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்பிளே இது வரை எந்த ஸ்கூட்டரிலும் இல்லாத பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ஓலா எஸ் 1-ல் திருட்டு எதிர்ப்பு எச்சரிக்கை அமைப்பு, ஜியோ-ஃபென்சிங் மற்றும் சுடர்-தடுப்பு மற்றும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பு கொண்ட பேட்டரி ஆகியவவை உள்ளன. இதில் முன்புறத்திலும் பின்புறத்திலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 'ஹில் ஹோல்ட்' அம்சமும் உள்ளன. இவை போக்குவரத்து நெரிசலில் எளிதாக ஸ்கூட்டரை செலுத்த உதவும்.

110/70 ஆர் 12 டயர்கள், பின்புற மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் மற்றும் முன்பக்க சிங்கிள் ஃபோர்க் சஸ்பென்ஷன் ஆகியவை சிறந்த சாலை பிடிப்பு மற்றும் மேம்பட்ட ஓட்டுனர் அனுபவத்திற்கு வழிவகுக்கிறது. இதில் உள்ள க்ரூஸ் பயன்முறை, வாகன ஓட்டிகளின் பயண அனுபவத்தை மேன்மையாக்குகிறது. இதில் உள்ள ரிவர்ஸ் பயன்முறை, நெரிசலான இடங்களிலும் வண்டியை பார்க் செய்வதை எளிதாக்குகிறது. ஓலா ஸ்கூட்டர்கள் (Ola Scooters) குரல் அங்கீகாரத்துடன் (voice recognition) வருகின்றன. இது முக்கிய பணிகளை விரைவாக முடிக்க உதவுகிறது.

ALSO READ: Ola Electric Scooter: S1 மற்றும் S1 Pro வகைகளின் விலையை வெளியிட்டது ஓலா நிறுவனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News