மாருதியின் இந்த கார்களைய அபரிமிதமான தள்ளுபடியில் பெறுங்கள்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கார் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2022, 02:53 PM IST
  • கார் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
  • மாருதி சுஸுகியும் தனது கார்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது.
  • மாருதி சுசுகி அரீனா மார்ச் 2022 தள்ளுபடிகள்
மாருதியின் இந்த கார்களைய அபரிமிதமான தள்ளுபடியில் பெறுங்கள் title=

இந்த மாதம் ஹோலி பண்டிகையை கொண்டாட இந்தியா தயாராக உள்ளது. இதன் மூலம், வாகன உற்பத்தியாளர்கள் விற்பனை பட்டியலில் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கார் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியும் தனது கார்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

மாருதி சுசுகி அரீனா மார்ச் 2022 தள்ளுபடிகள்

மாருதி சுஸுகி ஆல்டோ: மாருதி சுஸுகி ஆல்டோவில் ரூ.28000 வரை வழங்கப்படுகிறது. இதில் ரூ.3000 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 வரை ரொக்க தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ: ரூ.28000 வரை இதில் வழங்கப்படுகிறது. இதில் ரூ.3000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.15,000 வரை ரொக்க தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | 3ஜி, 4ஜிக்கு டாடா, இந்தியா விரைவில் 6G அறிமுகம்

மாருதி சுசுகி ஈகோ: இதில் ரூ.28000 வரை வழங்கப்படுகிறது. இதில் ரூ.3000 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 வரை ரொக்க தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

மாருதி சுஸுகி வேகன்ஆர்: இதில் ரூ.39000 வரை வழங்கப்படுகிறது. இதில் ரூ.4000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.25,000 வரை ரொக்க தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

மாருதி சுசுகி செலிரியோ: இதில் ரூ.23000 வரை வழங்கப்படுகிறது. இதில் ரூ.3000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 வரை ரொக்க தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்: இதில் ரூ.28000 வரை வழங்கப்படுகிறது. இதில் ரூ.3000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.15,000 வரை ரொக்க தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

மாருதி சுசுகி டிசையர்: இதில் ரூ.23000 வரை வழங்கப்படுகிறது. இதில் ரூ.3000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 வரை ரொக்க தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா: ரூ.17500 வரை இதில் வழங்கப்படுகிறது. இதில் ரூ.2500 வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5000 வரை ரொக்க தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

மாருதி சுசுகி நெக்ஸா மார்ச் 2022 தள்ளுபடிகள்

மாருதி சுஸுகி இக்னிஸ்: இதில் ரூ.32000 வரை வழங்கப்படுகிறது. இதில் ரூ.2000 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.10,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.20,000 வரை ரொக்க தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

மாருதி சுஸுகி சியாஸ்: இதில் ரூ.40000 வரை வழங்கப்படுகிறது. இதில் ரூ.5000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.25000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.10,000 வரை ரொக்க தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

மாருதி சுஸுகி எஸ்-கிராஸ்: ரூ. 50000 வரை இதில் வழங்கப்படுகிறது. இதில் ரூ.5000 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ.25000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.20000 வரை ரொக்க தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | ஹோலி பண்டிகையில் ஹுண்டை கார்களுக்கு கலர் கலரா கலக்கல் தள்ளுபடிகள்

தள்ளுபடிகள் இல்லை: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி சுஸுகி பலேனோ மீதான தள்ளுபடி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், நிறுவனம் அதன் எஸ்-சிஎன்ஜி வரம்பில் எந்த தள்ளுபடியையும் வழங்கவில்லை. எர்டிகா மற்றும் எக்ஸ்எல்6 போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களும் தள்ளுபடியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News