ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீச்சார்ஜ் திட்டங்களை வைத்திருக்கிறது. குறிப்பாக மலிவு விலை பிளான்கள் தான் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது. அந்தவகையில் ரூ.895 திட்டத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஜியோவின் இந்த திட்டம் 336 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி தான் ஹைலைட். ஏனென்றால் இவ்வளவு வேலிடிட்டியில் குறைவான விலையில் கிடைக்கும் சூப்பர் பிளான். அந்தவகையில் இது மலிவான திட்டம் என அடித்து சொல்ல முடியும். இந்த திட்டத்தின் ஒரு மாத செலவு சுமார் ரூ.80 மட்டுமே. அதாவது, ஒரு நாள் செலவு 2 ரூபாய்.
மேலும் படிக்க | Oneplus மொபைல் வச்சு இருக்கீங்களா? ரிட்டன் செய்து முழு பணத்தையும் திரும்ப பெறலாம்!
ரிலையன்ஸ் ஜியோ ரூ 895 ரீசார்ஜ் பிளான்
ஜியோவின் ரூ.895 ரீசார்ஜ் திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. 11 மாதங்களுக்கும் மேலான வேலிடிட்டி இந்த பிளானில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். தினமும் 2ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கும். இப்போது நாம் அழைப்பைப் பற்றி பேசினால், இதில் உங்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு கிடைக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு 50 SMSகளை இலவசமாக வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், இந்த திட்டம் உங்கள் பட்ஜெட்டுக்கு மிகவும் மலிவானது.
இது திட்டத்தின் மாதாந்திர செலவு
இந்த திட்ட சுழற்சியை 28 நாட்களுக்கு எடுத்துக் கொண்டால், வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு தோராயமாக ரூ.75 செலவாகும். 30 நாட்களுக்கான செலவு என்று பார்த்தால் 80 ரூபாய் வருகிறது. ஒரு நாள் செலவு சுமார் 2 ரூபாய். குறைந்த விலையில் அதிக நன்மைகளை விரும்பும் பயனர்களுக்காக இந்த திட்டம் உள்ளது. ஜியோவின் சிறந்த விற்பனையான திட்டங்களின் எண்ணிக்கையில் இது சேர்க்கப்படுவதற்கு இதுவே காரணம். இந்த திட்டம் ஜியோ போன் பயனர்களுக்கு மட்டுமே என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ