ஜியோ ப்ரீப்பெய்ட் பிளான்
ஜியோவின் ரூ.239 திட்டத்தில் நாள்ளொன்றுக்கு 1.5ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். 28 நாட்கள் வேலிடிட்டி. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 259 ரூபாய் திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் அனுப்பிக் கொள்ள முடியும்.
ஏர்டெல் ரூ.300 பிளான்
209 ரூபாய் விலையில் உள்ள ஏர்டெல்லின் இந்த திட்டம் 21 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில் அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பிக் கொள்ளலாம். அமேசான் பிரைம் வீடியோவின் இலவச அணுகலையும் குறிப்பிட்ட நாட்களுக்கு பெற்றுக் கொள்ளலாம். 239 ரூபாய் திட்டத்தில் நாளொன்றுக்கு ஒரு ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்கள், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம். 24 நாட்கள் வேலிடிட்டி.
265 ரூபாய் திட்டம் 28 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டது. இதில் அனைத்து நெட்வொர்குகளுக்கும் அன்லிமிட்டெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். தினமும் 100 எஸ்எம்எஸ் 1ஜிபி தினசரி டேட்டாவும் அனுபவிக்கலாம். அமேசான் பிரைம் இலவச அணுகல் குறிப்பிட்ட நாட்களுக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க | மொபைல் பேட்டரிகள் வெடிப்பதற்கான காரணம் இதுதான் - இந்த தவறை செய்யாதீங்க
Vodafone-Idea பிளான்கள்
199 ரூபாய் திட்டத்தில் தினசரி 1GB டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ்கால், 100 SMS கிடைக்கும். 18 நாட்கள் வேலிடிட்டி. 239 ரூபாய் திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும். 1 ஜிபி தினசரி டேட்டா அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் உள்ளிட்டவை கிடைக்கும். 299 ரூபாய் திட்டத்தில் 28 நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் தினமும் 1.5 ஜிபி டேட்டா உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அன்லிமிடெட் அழைப்பு உள்ளிட்ட சலுகைகள் உள்ளன. இந்த திட்ட வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக Binge All Night மற்றும் Weekend Data Rollover நன்மைகளும் கிடைக்கும்.
மேலும் படிக்க | அசத்தும் அமேசான்: ரூ. 24,999 Redmi Note 11 Pro + 5G போனின் விலை வெறு. ரூ. 4,899
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR