இதுக்கு மேல பெஸ்ட் ப்ரீப்பெய்ட் பிளான் எதிர்பார்க்காதீங்க! ஜியோ மாஸ் பிளான்

Jio Prepaid Offer: ஜியோவில் குறைந்த விலையில் இருக்கும் ப்ரீப்பெய்ட் திட்டத்தின் சூப்பரான நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 11, 2022, 04:03 PM IST
இதுக்கு மேல பெஸ்ட் ப்ரீப்பெய்ட் பிளான் எதிர்பார்க்காதீங்க! ஜியோ மாஸ் பிளான் title=

Jio Cheapest Plan: இந்தியாவில் இருக்கும் மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு அடிக்கடி தலைவலி கொடுக்கக்கூடிய நிறுவனம் என்றால் அது ஜியோ தான். தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சூப்பரான நன்மைகளுடன் ப்ரீப்பெய்ட் பிளான்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் மிக குறைவான விலையில் ஜியோ கொடுத்திருக்கும் சூப்பரான ப்ரீப்பெய்ட் பிளான் பற்றிய முழு விவரத்தையும் நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.  

மேலும் படிக்க | வருஷம் முழுவதும் மின்சார கட்டணமே வராமல் இருக்கனுமா? இதை செய்தால் போதும்

இந்த திட்டம் என்ன? இதில் கிடைக்கும் நன்மைகள்

ஜியோவில் இருக்கும் பல ப்ரீப்பெய்ட் திட்டங்கள் இருந்தாலும், இப்போது நாம் தெரிந்து கொள்ள இருக்கும் திட்டத்தின் விலை ரூ.249. இது ஒரு மலிவான ப்ரீப்பெய்ட் திட்டம். வேலிடிட்டி 23 நாட்கள் மட்டுமே என்றாலும் இணையத்தின் வேகம் மிக அதிகமாக இருக்கும். மற்ற பிளான்களில் இருக்கும் அதே சலுகைகள் இதிலும் இருக்கிறது. அன்லிமிடெட் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவைகளை வாடிக்கையார்கள் மேற்கொள்ளலாம்.

டேட்டாவைப் பற்றி பேசினால் நாள்தோறும் 2ஜிபி டேட்டா இருக்கும். அதிவேக இணையம் வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சூப்பரான திட்டம். நாள் முழுவதும் இந்த 2ஜிபி டேட்டாவுக்குள் நீங்கள் திரைப்படங்கள், வீடியோக்களை பார்க்கலாம். ஒருவேளை 2ஜிபியை நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள் என்றால், ஜியோ பூஸ்டரில் ரீச்சார்ஜ் செய்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்ய விருப்பம் இல்லை என்றால் உங்களின் இணைய வேகம் குறைந்துவிடும். நெகடிவ் என்று சொன்னால், இந்த திட்டத்தின் வேலிடிட்டி மட்டுமே. 

மேலும் படிக்க | அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் இலவசமா வேணுமா... இதை பண்ணுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News