Jio Recharge: இன்டர்நெட் வேண்டாம்! கால் மட்டும் பேசணுமா? ஜியோவின் அசத்தல் திட்டம்!

Jio Recharge Plans: ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  குறைந்த விலையில் நிறைய திட்டங்களை வைத்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 18, 2024, 06:52 AM IST
  • ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்.
  • இலவச குரல் அழைப்புகளுக்கு சிறப்பு திட்டங்கள்.
  • மலிவு விலையில் வழங்கி வருகிறது.
Jio Recharge: இன்டர்நெட் வேண்டாம்! கால் மட்டும் பேசணுமா? ஜியோவின் அசத்தல் திட்டம்! title=

Jio Recharge Plans: பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. பயனர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, குறைந்த விலை முதல் அதிக விலை வரை ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.  தற்போது அனைவருமே ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிம்மை மெயின் நம்பராகவும், இன்னொரு சிம்மை இரண்டாவது நம்பராகவும் பயன்படுத்தி வருகின்றனர். இது போல் இரண்டு சிம்கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்வது தான். மாதம் மாதம் ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றங்கள் வருகிறது.  

மேலும் படிக்க | கோடையில் ஃபிரிட்ஜ் வாங்க திட்டமா? ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவான விலையில்... அமேசான் ஆப்பர்!

அதே சமயம் இன்டர்நெட் பயன்படுத்த பலரும் தங்கள் வீடுகளில் Wi-Fi இணைப்பு வைத்துள்ளனர். இதனால் பலருக்கு சிம்மில் உள்ள இன்டர்நெட் வேஸ்ட் ஆகிறது.  இதனால் பல கால் செய்வதற்கு மட்டும் ரீசார்ஜ் செய்ய விரும்புகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் விலை குறைவான ரீசார்ஜ் திட்டங்களை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.  உங்களுக்கு கால் செய்து கொள்ள மட்டும் ரீசார்ஜ் வேண்டும் என்றால், ரிலையன்ஸ் ஜியோவின் மூன்று மலிவான ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன.  இதன் மூலம் வரம்பற்ற அழைப்பை செய்து கொள்ள முடியும். இதன் மூலம், தேவையில்லாமல் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வதை தடுக்க முடியும்.  உங்கள் தேவைக்கேற்ப இந்த திட்டங்கள் மூலம் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

ஜியோ 149 ரீசார்ஜ் திட்டம்

ஜியோவின் அன்லிமிடெட் அழைப்புடன் கூடிய மலிவான ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்று தான் ரூ. 149 ரீசார்ஜ் திட்டம். இந்த திட்டம் மொத்தம் 20 நாட்கள் செல்லுபடியாகும். இதன் மூலம் தினமும் 1ஜிபி வரை டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், இதனுடன் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும். அதே நேரத்தில், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்றவற்றின் இலவச அணுகலையும் பெற முடியும்.  மேலும் பல கூடுதல் நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன.  இது தவிர, ரூ.179 மற்றும் ரூ.199 ஆகிய இரண்டு மலிவுத் திட்டங்களையும் ஜியோ வழங்குகிறது.

ஜியோ 179 ரீசார்ஜ் திட்டம்

ஜியோவின் இந்த 179 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில், ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்கள் 1 ஜிபி வரை அதிவேக டேட்டா பயன்படுத்தி கொள்ள முடியும்.  இதனுடன், அனைத்து நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற கால் அழைப்புகளை செய்து கொள்ளலாம்.  அதே நேரத்தில், இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ் செய்து கொள்ளலாம். மொத்தமாக இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு 24 ஜிபி டேட்டா கிடைக்கும். இது மட்டுமல்லாமல், ஜியோ சினிமா, ஜியோ கிளவுட், ஜியோ டிவி மற்றும் பிற ஜியோ பயன்பாடுகளின் இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | Moto G4: ரூ.8 ஆயிரத்திற்கும் குறைவா... 8ஜிபி RAM மொபலை தேடுறீங்களா... இதோ உங்களுக்காக!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News