இந்திய தட்பவெட்பத்தில் மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவது பாதுகாப்பானதா?

இந்தியாவில் மின்சார வாகனங்களின் அறிமுகம், ஒரு நம்பிக்கைக்குரிய முன்னேற்றமாகும். இருப்பினும், அடுத்தடுத்து இரு சக்கர மின்சார வாகனங்கள் தீப்பற்றி விபத்து ஏற்பட்ட சம்பவங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 30, 2022, 03:40 PM IST
  • மின்சார வாகனங்கள் தீபிடிக்க காரணங்கள்
  • சார்ஜிங்குக்கும் தீபிடிப்பதற்கும் இடையிலான தொடர்பு
  • இந்திய வானிலைக்கு ஏற்றதா மின்சார வாகனங்கள்?
இந்திய தட்பவெட்பத்தில் மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவது பாதுகாப்பானதா? title=

இந்தியாவில் மின்சார வாகனங்களின் அறிமுகம், ஒரு நம்பிக்கைக்குரிய முன்னேற்றமாகும். இருப்பினும், பல தொழில்களைப் போலவே, அதற்கான சொந்த சவால்கள் மற்றும் சிக்கல்கள் உள்ளன. 

அத்தகைய ஒரு பிரச்சினை, ஆனால் அபாயகரமான பிரச்சனைகளில் ஒன்றாக வாகனங்களில் தீ பற்றும் சம்பவங்கள் மாறிவிட்டன. மின்சார வாகனங்கள் தீப்பிடிப்பது நமக்கு புதிதல்ல. இருப்பினும், இரண்டு சமீபத்திய சம்பவங்கள் EV புரட்சியின் மீது அச்சத்தை ஏற்படுத்தி, பாதுகாப்பு தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளன.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தபோது தீப்பிடித்தது. தீ விபத்தின் வீடியோ வைரலானது, இது நிறுவனத்தின் மீதான கேள்விகளை எழுப்பியது.

மற்றொரு சம்பவத்தில், ஒகினாவா ஆட்டோடெக் EV அல்லது சார்ஜிங் கருவியால் ஏற்பட்ட தீ காரணமாக ஒரு தந்தையும் மகளும் உயிரிழந்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்கிறது.

மேலும் படிக்க | மின்சார வாகனங்கள் பற்றி எரிவதற்கான காரணம் என்ன?

EV பிரிவில் குறிப்பாக இருசக்கர வாகனப் பிரிவில் போட்டி அதிகரித்து வருகிறது. மின்சார ஸ்கூட்டர்கள் பிரபலமடைந்து வருகின்றன, அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் மாநில மற்றும் மத்திய அளவில் அரசாங்கத்தின் மானியங்கள் மின்சார வாகனங்களை வாங்க மக்களைத் தூண்டுகின்றன. 

இது உண்மையில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது.  வாகனத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு போன்ற மற்ற முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த வாகனங்கள் விற்பனையாகும்.

மற்ற சந்தைகளுடன் ஒப்பிடும் போது, ​​இந்தியாவில் EVகளின் பயன்பாடு எபது,  தனித்துவமான காலநிலை மற்றும் பயன்படுத்தும் மக்களை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்த வேண்டும்.

இந்திய துணைக்கண்டத்தில் அதிகரித்து வரும் வெப்பம், சில புதிய EV உற்பத்தியாளர்களுக்கு சோதனைக் காலமாக இருக்கும்.

மேலும் படிக்க | இந்தியாவில் அதிகம் அறியப்படாத மின்சார ஸ்கூட்டர் பிராண்டுகள்

சமீபத்தில் மின்சார இருசக்கர வாகனங்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் பற்றி இந்திய மின்சார வாகன நிபுணர்களின் கருத்துகள் இவை:  
Maxson Lewis, MD மற்றும் CEO, Magenta: "மின்சார வாகனங்கள் முற்றிலும் பாதுகாப்பான தொழில்நுட்ப படைப்புகள். இவை, மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் போன்றவை தான்... தொழில்நுட்பத்தின் சக்கரம் அல்லாத பதிப்புகளான மொபைல், லாப்டாப் போன்றவற்ரின் மில்லியன் கணக்கானவை பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும், மின்சார வாகனங்களின் பாதுகாப்பை தீர்மானிப்பது இந்தியாவின் வெப்பம், ஈரப்பதம், ஹார்மோனிக்ஸ் மற்றும் மனிதர்கள் தான்”.

வாகனங்களில் தீபற்றிய சம்பவங்கள் குறித்து பேசும் லூயிஸ், "சமீபத்திய விபத்துகளுக்கு இரண்டு சாத்தியமான தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் ஒரு சமூக-பொருளாதாரக் காரணம் உண்டு.  பேட்டரியில் குறைபாடு இருந்ததா என்பதும் தவறான சார்ஜிங் உபகரணம் பயன்படுத்தப்பட்டதா என்பதும் தொழில்நுட்ப அடிப்படையில் பார்க்க வேண்டியவை.

 'சந்தைக்கு வரும் தயாரிப்புகள்' விரைவாகவும், மலிவாகவும் இருப்பதன் அடிப்படையில் பயன்பாட்டிற்கு வருவது என்ற பொருளாதார சமூக காரணம், பாதுகாப்பு மற்றும் கள சோதனையில் நிறுவனங்கள் குறுக்குவழிகளை எடுக்க காரணமாகிறது.’ என்று கூறுகிறார்.

மேலும் படிக்க | எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து தந்தை, மகள் பலி

க்ரேயான் மோட்டார்ஸின் இயக்குனர் மயங்க் ஜெயின் கூறுகையில், “EVகள் சாராம்சத்தில் ICE ஐ விட பாதுகாப்பானவை. நாங்கள் மின்சார வாகனங்களில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டு வருகிறோம், EV களுக்கான அனைத்து விபத்துகளும் கண்காணிப்பின் கீழ் உள்ளன. பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதோடு, அதுதான் முதல் மற்றும் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தை மேம்படுத்த இன்னும் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக நான் உணர்கிறேன். இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவை பேட்டரிகளில் உள்ள சிக்கல்களின் விளைவாக இருக்கும், அவற்றின் வெப்ப மேலாண்மை அல்லது செல் தேர்வு உட்பட பிற சிக்கல்கள் இருக்கலாம்.

மின்சார வாகனங்களை வாங்கும்போது, அதுதொடர்பான விழிப்புணர்வும் அவசியம். இந்திய வானிலை மற்றும் சூழலை கருத்தில் கொண்டு, அதற்கேற்றாற்போல தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு, அவை தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும்.

மின்சார வாகனங்களில் நெருப்பு பற்றும் சிக்கலைச் சமாளிக்க சில இந்திய பேட்டரி உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்படுவதாக க்ரேயான் மோட்டார்ஸ் கூறுகிறது. சிறந்த பேட்டரி பராமரிப்பு மற்றும் மேம்பட்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றிற்காக வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரத்தையும் அவர்கள் தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க | எலக்ட்ரிக் ஸ்கூட்டரா? எமனின் வாகனமா?- சென்னையில் மீண்டும் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News