புதுடெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த யுவராஜா, தான் உருவாக்கிய 'சூப்பர் தட்கல்' மற்றும் 'சூப்பர் தட்கல் புரோ' ரயில்வே டிக்கெட் முன்பதிவு செயலிகளால் லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்தார்.
ஐ.ஆர்.சி.டி.சியின் டிக்கெட் முன்பதிவு முறையைத் தவிர்ப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திருப்பூரின் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள், தெற்கு ரயில்வே தலைமையகத்தில் (சென்னை) ஆர்.பி.எஃப் சைபர் செல் அதிகாரிகளுடன், இந்த மோசடியைக் கண்டுபிடித்து, மோசடி மூலம் பணம் குவித்ததற்காக அக்டோபர் 23 அன்று அவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், யுவராஜா தனது செயல்பாடுகள் அனைத்தையும் விளக்கமாக எடுத்துக் கூறினார். IRCTCயில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அவரது கணக்குக்கு பணம் சென்றது எப்படி?
போலி மொபைல் செயலிகளின் பயனர்கள் 20 ரூபாய் மதிப்புள்ள 10 நாணயங்கள் கொண்ட நாணயப் பொதியை (coins pack) வாங்க வேண்டியிருந்தது, இந்தத் தொகை முன்கூட்டியே செலுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு முன்பதிவுக்கும், ஐந்து நாணயங்கள் அவற்றின் நாணயப் பொதியின் (coins pack) இருப்பிலிருந்து கழிக்கப்பட்டன. அண்ட்ராய்டு செயலிகளுக்கான (android apps) கட்டணம் செலுத்தும் முறை ‘இன்ஸ்டாமோஜோ’(‘Instamojo’) என்ற கட்டண நுழைவாயில் (payment gateway) ஆக வைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் யுவராஜாவின் தனிப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து சேரும்.
2016 முதல் 2020 வரை 20 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக விசாரணையின் போது யுவராஜா ஒப்புக் கொண்டார். இவர் உருவாக்கிய போலி செயலிகளை சுமார் ஒரு லட்சம் இறுதி பயனர்கள் பதிவிறக்கம் செய்திருந்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட யுவராஜா கைது செய்யப்பட்டு , அவர் மீது ரயில்வே சட்டத்தின் பிரிவு 143 (2) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தி இது:
The software developed was used illegally to book tkts through the tickets denying genuine users.Use of illegal software is prohibited under Rly act. No faster app as these features were available with IRCTC which were disabled to ensure level playing field .
— IRCTC (@IRCTCofficial) November 17, 2020
தென்னக ரயில்வேயின் தலைமையகத்தில் உள்ள ஆர்.பி.எஃப்-இன் சைபர் செல் (RPF cyber cell), தரவு பகுப்பாய்வு மற்றும் போலி செயலியை உருவாக்கிய டெவலப்பரின் இருப்பிடத்தை அடையாளம் காண்பதில் முக்கிய பங்கு வகித்தது, மேலும் சேவையக மூல குறியீடு, பயன்பாட்டு மூல குறியீடு, இறுதி பயனர்களின் பட்டியல் (server source code, application source code, end-users list) மற்றும் குற்றவாளியின் வங்கி அறிக்கைகள் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களையும் ஆர்.பி.எஃப்-இன் சைபர் செல் சேகரித்தது.
சட்டவிரோத செயலிகளான சூப்பர் தட்கல் (Super Tatkal) மற்றும் சூப்பர் தட்கல் புரோ (Super Tatkal Pro) பிளே ஸ்டோரிலும் (play store), browser-இலும் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வேத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR