இந்தியாவில் கூகுள் ஹோம் என்ற அசிஸ்டென்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை ரிலையன்ஸ் கடைகளில் வாங்கினால் ஜியோ வைபை இலவசமாக கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Reliance Jio-வை மிஞ்சும் ஏர்டெல்-ன் Free ''Live Streaming'' சலுகை!
இந்த கூகுள் ஹோம் குரல் வழியாக தேடும் வசதிகளை கொண்டிருக்கிறது. தற்போது இதில் தேடும் வசதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உள்ளது. விரைவில் மற்ற இந்திய மொழிகளில் கொண்டுவர உள்ளது. இந்த கூகுள் ஹோம் மூலம் எழுத்துகளின் உதவியில்லாமல் குரல் வழியாகவும் தேடலாம். இந்த சேவையில் முதல் கட்டமாக 4.5 லட்சம் பேர் இணைவார்கள் என அந்நிறுவனம் எதிர்பார்கிறது.
இந்தியாவில் கூகுள் ஹோம் அசிஸ்டென்ஸ் அறிமுகம்
இந்த கூகுள் ஹோம் மற்றும் கூகுள் மினி கருவிகளின் விலை ரூ. 9,999, மற்றும் ரூ. 4,499 என கிடைக்கிறது. இந்த கூகுள் ஹோம் ரிலையன்ஸ் டிஜிட்டல், பிளிப்கார்ட், டாடா குரோமா போன்ற முன்னணி விற்பனை நிலையங்களில் கிடைக்கும்.
Airtel LandLine வைத்து இருப்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
இதனையடுத்து, இந்த கருவியை ரிலையன்ஸ் ஜியோ கடைகளில் வாங்கினால், உங்களுக்கு ஜியோ வைபை (JioFi FREE) இலவசமாக கிடைக்கும். மேலும் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் (Prime Rs 99) ஜியோ ஆப் மூலம் ரூ.149 ரீ-சார்ச் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு 100GB கூடுதல் தரவு வழங்கப்படும். இந்த தரவு 10 கூப்பன் மூலமாக, அதாவது, ஒரு கூப்பன் மூலம் 10ஜிபி என 10 கூப்பன் மூலம் மொத்தம் 100 ஜிபி கிடைக்கும். இந்த சலுகை ரீ-சார்ச் செய்த நாள் முதல் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.