கார் வாங்கணுமா? ஜூலையில் மாருதி கார்களில் எக்கச்சக்க சலுகைகள்

Maruti Suzuki: ஜூலை 2023 இல், வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தனது அரினா வரிசையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 10, 2023, 07:01 PM IST
  • செலிரியோவின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வகைகளில் மாருதி சுமார் ரூ.65,000 தள்ளுபடியை வழங்குகிறது.
  • அதன் தானியங்கி பதிப்பில் ரூ.35,000 தள்ளுபடியும், சிஎன்ஜி வகைக்கு ரூ.65,000 தள்ளுபடியும் கிடைக்கும்.
  • இந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு செய்யப்பட்ட 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் கிடைக்கிறது.
கார் வாங்கணுமா? ஜூலையில் மாருதி கார்களில் எக்கச்சக்க சலுகைகள் title=

மாருதி சுஸுகி: கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஜூலை 2023 இல், வாகனத் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி தனது அரினா வரிசையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. மாருதி நிறுவனம் எந்த மாடலுக்கு எவ்வளவு தள்ளுபடி அளிக்கிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

மாருதி சுஸுகி ஆல்டோ 800

மாருதி நிறுவனம் தற்போது இந்த காரின் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இப்போது மீதமுள்ள கார்களுக்கு மட்டுமே தள்ளுபடி கிடைக்கும். இந்த காரின் வகைகளுக்கு ஏற்ப ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 799 சிசி இன்ஜினைப் பெறுகிறது. இந்த சலுகை அதன் சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10

ஆல்டோ கே10 முற்றிலும் புதிய இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் 1.0 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனைக் கொண்டுள்ளது. இதில் சிஎன்ஜி ஆப்ஷனும் உள்ளது. இந்த காருக்கு ரூ.50,000 முதல் ரூ.60,000 வரையிலான தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.

மாருதி சுசுகி எஸ் பிரஸ்ஸோ

மாருதி எஸ் பிரஸ்ஸோ கார் ஆல்டோ கே10 போன்ற அதே 1.0-லிட்டர் எஞ்சின் மற்றும் இரண்டு கியர்பாக்ஸ்களின் தேர்வையும் பெறுகிறது. மேலும், இதில் சிஎன்ஜி ஆப்ஷனும் கிடைக்கிறது. இந்த காரில் ரூ.55,000 முதல் ரூ.65,000 வரை தள்ளுபடிகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | Hyundai Exter vs Maruti Fronx: அம்சங்கள், விலை, வடிவமைப்பு.. முழு ஒப்பீடு இதோ 

மாருதி சுஸுகி வேகன் ஆர்

மாருதி சுஸுகி, வேகன் ஆர் -இன் அனைத்து வகைகளிலும் ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை தள்ளுபடியை வழங்குகிறது. வேகன் ஆர் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுடன் சிஎன்ஜி பவர்டிரெய்ன் விருப்பத்தையும் பெறுகிறது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று.

மாருதி சுசுகி செலிரியோ

செலிரியோவின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வகைகளில் மாருதி சுமார் ரூ.65,000 தள்ளுபடியை வழங்குகிறது. அதன் தானியங்கி பதிப்பில் ரூ.35,000 தள்ளுபடியும், சிஎன்ஜி வகைக்கு ரூ.65,000 தள்ளுபடியும் கிடைக்கும். இந்த காரில் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு செய்யப்பட்ட 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் கிடைக்கிறது.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்டில் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சின் கிடைக்கிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு உள்ளது. அதன் மேனுவல் வேரியண்டில் சுமார் ரூ.45,000 தள்ளுபடியும், ஆட்டோமேட்டிக் வேரியண்டில் ரூ.50,000 வரை தள்ளுபடியும் கிடைக்கிறது. இதன் சிஎன்ஜி பதிப்பில் ரூ. 25,000 தள்ளுபடி கிடைக்கிறது.

மாருதி சுசுகி ஈகோ

மாருதி சுசுகி ஈகோ எம்பிவி இந்த மாதம் ரூ.39,000 வரை தள்ளுபடி பெறுகிறது. அதே நேரத்தில் அதன் சிஎன்ஜி மற்றும் கார்கோ வகைகளில் ரூ.38,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. மாருதி ஈகோ 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது. இது 73 ஹெச்பி ஆற்றலை உருவாக்குகிறது. இது 5 மற்றும் 7 இருக்கை அமைப்புகளை கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி டிசையர்

மாருதி டிசைரின் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் வகைகளில் ரூ.17,000 ஆஃபர்கள் கிடைக்கின்றன. ஆனால் அதன் சிஎன்ஜி வேரியண்டில் தள்ளுபடி இல்லை. இது 90 ஹெச்பி ஆற்றலை உருவாக்கும் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் விருப்பத்தைப் பெறுகிறது.

மேலும் படிக்க | ஜூன் மாதம் இந்த டாடா கார்களில் அதிரடி தள்ளுபடி: முந்துங்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News