iPhone Tips: பயன்படாத செயலிகளை ஐபோனில் நீக்க சூப்பர் டிப்ஸ்

ஐபோனில் ஸ்டோரேஜ் பிரச்சனை இருந்தால், பயன்படாத செயலிகளை அடையாளம் கண்டு நீக்குவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 28, 2022, 02:51 PM IST
  • ஐபோன் ஸ்டோரேஜ் டிப்ஸ்
  • ஆப்களை ஆப்லோடு செய்யலாம்
  • தரவுகள் அப்படியே இருக்கும்
iPhone Tips: பயன்படாத செயலிகளை ஐபோனில் நீக்க சூப்பர் டிப்ஸ் title=

ஐபோன் விலை உயர்ந்த போனாக இருந்தாலும், ஸ்டோரேஜ் பிரச்சனையை யூசர்கள் சந்திக்கின்றனர். ஹைடெக் தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும், ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ளும் ஆப்சன் ஐபோனில் இல்லை. இது யூசர்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனை உங்களுக்கும் இருந்தால், ஐபோனில் ஸ்டோரேஜ் அதிகப்படுத்துவதற்கு பயன்படுத்தாத செயலிகளை நீக்குவது மட்டுமே ஒரு வழி. அதனை எப்படி செய்யலாம்? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

ஐபோனில் பயன்படாத செயலிகளை நீக்க ஒரு சூப்பரான டிப்ஸ் உள்ளது. அதாவது ஐபோனிலிருந்து பயன்பாடுகளை ஆஃப்லோட் செய்ய ஆப்பிள் அனுமதிக்கிறது. இது செயலியை நீக்குவது போன்றது அல்ல. ஆஃப்லோடிங் என்பது, நீங்கள் சிறிது காலமாகப் பயன்படுத்தாத ஆப்ஸ் அகற்றப்பட்டாலும், உங்கள் தரவு பாதுகாப்பாக இருக்கும். இங்குள்ள நன்மை என்னவென்றால், நீங்கள் அந்த செயலியை மீண்டும் நிறுவும் போதெல்லாம், பயன்பாடு தானாகவே உங்கள் தரவைப் பெற்றுக் கொள்ளும். 

மேலும் படிக்க | கூட்டத்தில் காணாமல் போய்விட்டால் கண்டுபிடிப்பதை சுலபமாக்கும் கூகுள் மேப்ஸ்

உங்கள் ஐபோனில் இருந்து பயன்பாட்டை எவ்வாறு ஆஃப்லோட் செய்யலாம் என்பதை நான் உங்களுக்குச் சொல்வதற்கு முன், உங்கள் ஐபோனின் சேமிப்பகத்தை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம். உங்கள் ஐபோனில், அமைப்புகளுக்குச் சென்று, ஜெனரல் என்பதைத் கிளிக் செய்யவும். பின்னர் அறிமுகம் பகுதிக்குச் செல்லவும். அதில் இருக்கும் ஆப்சன்களில் ஐபோன் சேமிப்பகத்தைப் பார்ப்பதற்கான விருப்பத்தைக் காட்டும். அதைத் கிளிக் செய்தால் நீங்கள் பயன்படுத்திய இடத்தின் ஸ்டோரேஜ் காண்பிக்கப்படும். 

செயலியை ஆஃப்லோடு செய்வது எப்படி?

iOS 11 உடன், ஆப்பிள் ஐபோன் யூசர்களுக்கு செயலிகளை ஆஃப்லோட் செய்வதற்கான வழியை வழங்குகிறது. நீங்கள் ஒரு செயலியை நீக்கும் போது, ​​அது உங்கள் iPhone-லிருந்து நிரந்தரமாக அகற்றப்படும். ஆனால் அதை ஆஃப்லோட் செய்வதால் ஆப்ஸ் ஐகானும் அதன் தரவும் அப்படியே இருக்கும். இருப்பினும், செயலியின் ஸ்டோரேஜ் நீக்கப்பட்டுவிடும். ஐபோனில் நீங்கள் செயலியை ஆஃப்லோட் செய்ய விரும்பினால், அந்த செயலியை நீங்கள் ஸ்டோரேஜில் கிளிக் செய்யுங்கள். இப்போது "ஆஃப்லோட் ஆப்" ஆப்சன் இருக்கும். இதனை நீங்கள் கிளிக் செய்யும்போது ஐபோனில் அந்த செயலி ஆப்லோடு ஆகிவிடும். மேனுவலாக நீங்கள் செய்ய விருப்பமில்லாமல் இருந்தால், ஐபோன் ஆட்டோமேட்டிக்காக செய்யவும் ஆப்சன் இருக்கிறது. செட்டிங்ஸில் சென்று அதற்கான ஆப்சனை தேர்ந்தெடுக்கும்போது, ஆட்டோமேடிக்காக பயன்படுத்தாத செயலி ஆப்லோடு ஆகிவிடும். 

மேலும் படிக்க | எச்சரிக்கை! போலி லோன் செயலிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News