வாட்ஸ்அப் மோசடி : மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் : மெட்டாவை வலுப்படுத்த மத்திய அரசு மோசடி குறித்து நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்கள் தங்கள் வாட்ஸ் அப் மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முக்கிய நோக்கமாக இந்த வாட்ஸ்அப் மூலம் இயங்கும் மோசடி செய்பவர்களிடமிருந்து சந்தேகத்திற்கு இடமில்லாத நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை இந்திய அரசு விரிவுபடுத்தத் தீவிர முயற்சியில் இறங்கியது.மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வாட்ஸ்அப்பின் நிறுவனமான மெட்டாவியில் மோசடிகளுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்துகிறது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் இதுபற்றி பேசியபோது “ மோசடிகளைத் தீர்ப்பது ஒரு வற்றாத பிரச்சினை என்றும், இந்த மோசடி செய்பவர்கள் பயனர்களை ஏமாற்ற புதிய வழிகளைத் தேடி வருகிறார்கள். அனைத்து பயனர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் வைக்கப்பட்டுள்ள எந்தவொரு குறை தீர்க்கும் முறைகளின் அடிப்படையில் மக்கள் தங்களுக்கு நடக்கும் மோசடி மெசேஸ் மற்றும் போன் கால் போன்றவற்றை முன்வந்து புகார் அளிக்கலாம்.
வாட்ஸ்அப்பில் நடக்கும் மோசடிகளை நிறுத்தும் நோக்கில் மத்திய அரசு மெட்டா நிறுவனத்துடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகக் கூறப்படுகிறது.மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் இதுபற்றி பேசுகையில், வாட்ஸ்அப் பயனாளர்கள் எந்தவொரு மோசடி பயன்பாட்டிற்கு எதிராக மக்கள் உடனடி புகார் அளிக்குமாறு கூறியுள்ளார். மேலும் மக்கள் புகார் அளிக்க MeitY-யும் உத்தரவிட்டுள்ளது. இந்த குறைகள் தீர்க்கப்படாவிட்டால், அதைக் குறைதீர்ப்பு மேல்முறையீட்டுக் குழுவிற்கு அனுப்பலாம். பயனர்கள் சிக்கல்களைப் புகாரளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ். கிருஷ்ணன் கூறியுள்ளார். விதிமுறைகள் வலுவாக இருக்க வேண்டும் என்று ட்ராய் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிப்பட்டிருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
பல்வேறு தளங்களிலிருந்து வரும் மோசடி மெசேஜஸ் குறித்து கவலைகள் அதிகரிப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா போன்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களளிடம் தேவையற்ற செய்திகளுக்கு எதிராக மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக புதிய விதிமுறைகளை மேற்கொள்ள வலியுறுத்தியது. இருப்பினும், வாட்ஸ்அப், மற்றும் டெலிகிராம் போன்றவற்றில் மோசடிகள் அதிகரித்துள்ளதாக புகார் வந்துள்ளது.
டெலிகிராம் போன்ற தளங்களில் இதேபோன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லை என்று மக்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் சம்பந்தப்பட்ட மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் வாட்ஸ்அப் தளத்தைப் பயன்படுத்தி நிதி மோசடி செய்து வருவதாகவும், வங்கி கணக்குகளை கண்டறிந்து எளிமையாக மோசடியில் இறங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | கொல்கத்தாவில் கொடூரம்! 7 மாத குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ