ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் ப்ரீப்பெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளதால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திடீரென அதிக விலைக்கு உயர்த்தப்பட்ட விலைகளால் எந்த பிளான்களை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமும் உள்ளனர். சிலர் வேறு சில நெட்வொர்குகளுக்கு மாறிவிடலாம் என்ற எண்ணத்திலும் உள்ளனர்.
மேலும் படிக்க | Micromax In 2c: ரூ.11,000-க்கும் குறைவான விலையில் சந்தையை கலக்க வருகிறது புதிய போன்
அப்படியான எண்ணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு பிஎஸ்என்எல்-ன் சரியான திட்டத்தை பற்றி சொல்கிறோம். இந்த திட்டத்தை நீங்கள் ஒருமுறை ரீச்சார்ஜ் செய்துவிட்டால் 365 நாட்களும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. BSNL-ன் 797 ரூபாய் திட்டம் 395 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த புதிய திட்டம் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், இந்த திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஜூன் 12 ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த கூடுதலான 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகை கிடைக்கும்.
797 ரூபாய் திட்டத்தின் பலன்கள் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் 60 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்பு, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய பலன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். 60 நாட்களுக்குப் பிறகு டேட்டாவின் வேகம் மட்டும் 80 Kbps ஆக குறைந்துவிடும். டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்புகளை நீங்கள் 60 நாட்களுக்கு மட்டுமே பெற முடியும் என்றாலும், சிம் கார்டு ஆண்டு முழுவதும்
60 நாட்களுக்குப் பிறகு, டேட்டாவின் வேகம் 80 Kbps ஆக குறைகிறது. முன்பே குறிப்பிட்டபடி, திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டேட்டா மற்றும் அழைப்புப் பலன்கள் 60 நாட்களுக்குப் பிறகு காலாவதியாகும், ஆனால் சிம் செயலில் இருக்கும். இதேபோல் ஜியோவின் 2545 ரூபாய் திட்டம் ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் பெறலாம்.
மேலும் படிக்க | ஜியோவின் அடுத்த அதிரடி; இந்த ரீசார்ஜ் திட்டங்களுடன் 4G போன் இலவசமா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR