அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிறுவனத்திடம் 4ஜி தொழில்நுட்பம் இல்லாதபோதிலும், இது சில புதிய திட்டங்கள் மூலம் பல புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது, அதே சமயம் வோடோபோன் நிறுவனம் பல வாடிக்கையாளர்களை இழந்துவிட்டது. பிஎஸ்என்எல் தற்போது பல புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பது, அதன் 4ஜி அறிமுகத்திற்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தும். இந்த 2022ம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவையை மக்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | மூன்று புதிய கேம்களை அறிமுகப்படுத்தும் Stadia Pro
இந்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனமானது 4ஜி சேவைக்கான உபகரணங்களை உள்ளூர் நிறுவனங்களிடம் இருந்தே பெற அனுமதித்துள்ளது, இருப்பினும் இதில் சிறப்பான அனுபவத்தினை பெற்ற இந்திய நிறுவனங்கள் எதுவுமில்லை. அதனால் பிஎஸ்என்எல் பிஓசியை உருவாக்க டாடா கன்சல்டண்சி சர்விஸுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இதற்கு கால அவகாசம் அதிகமானது, 4ஜி பிஓசியை உருவாக்க எதிர்பார்த்த தேதியை விட ஐந்து மாதங்கள் கால தாமதமானது. இருப்பினும் பிஎஸ்என்எல் இந்த நேரத்தை வீணடிக்காமல் 5ஜி என்எஸ்ஏ உருவாக்கத்தில் ஈடுபட்டது.
பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் டவர்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் 5ஜி சேவையை பெறும் என்று கூறப்படுகிறது. 4ஜியை காட்டிலும் 5ஜி-க்கு தான் சிறந்த கட்டமைப்பு தேவைப்படுகிறது, மற்ற நிறுவனங்கள் இந்த டவர்களை உருவாக்க அதிக நேரத்தையும், அதிக பணத்தையும் செலவிட நேரிடும். தற்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க்குகளில் ஏராளமான பிரச்சனைகளை வாடிக்கையாளர்கள் சந்திக்க நேரிடுகிறது.
வோடபோன் வாடிக்கையாளர்கள் குறைந்த விலை திட்டங்களை பெற விரும்பினால் அவர்களுக்கு பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் உள்ளது, வோடபோன் அதன் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்து வருகிறது. இந்த நெட்வொர்க்கிலிருந்து பலரும் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாறுகின்றனர். பிஎஸ்என்எல் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து மாநிலங்களிலும் அதன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் போன்ற நான்கு மாவட்டங்களில் 800 டவர்களை நிறுவ அனுமதி வாங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | புதிய மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன்; ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR