’நொடியில் நிறம் மாறும் கார்கள்’ - BMW-வின் புதிய தொழில்நுட்பம்

கார்களின் நிறத்தை நொடியில் மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை பி.எம்.டபள்யூ அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 7, 2022, 01:15 PM IST
  • பி.எம்.டபள்யூ நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது
  • காரில் நொடிப்பொழுதில் நிறம் மாறும் டெக்னாலஜியை கொண்டுவந்துள்ளது
  • இ இங்க் என்ற தொழில்நுட்பம் மூலம் கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன
’நொடியில் நிறம் மாறும் கார்கள்’ - BMW-வின் புதிய தொழில்நுட்பம் title=

பெட்ரோல், டீசல் கார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆட்டோமொபைல் துறையில் ஜாம்பவான்களாக இருக்கும் அனைத்து மிகப்பெரிய மற்றும் முன்னணி கார் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனத்தை திருப்பியிருக்கின்றனர். ஏறக்குறைய, பெட்ரோல், டீசல் வாகனங்களின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கூட சொல்லலாம். அதேநேரத்தில், எலக்டிரிக் வாகன சந்தை மெதுவாக வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் நிலையில், அவற்றில் புதுமையை புகுத்தி, வாடிக்கையாளர்களின் ஏகோப்பித்த வரவேற்பை பெற வேண்டும் என்பதில் மிக கவனமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருக்கின்றன.

ALSO READ | Flipkart Offer: iPhone 12-ல் இதுவரை இல்லாத அளவு அசத்தல் தள்ளுபடி, முந்துங்கள்

அந்தவகையில், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபள்யூ (BMW), தங்களது நிறுவனக் காரில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம், கார்களுக்கு பெயிண்ட் அடிக்கும் செலவை குறைப்பதுடன், விரும்பிய கலர்களை நொடிப்பொழுதில் மாற்றிக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது. அண்மையில் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் (Las Vegas) நகரில் நடைபெற்ற Consumer Electronics Show (CES)- BMW xi காரில் இந்த தொழில்நுட்பத்தை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அதாவது, ஒரு பட்டனை பிரஸ் செய்வதன் மூலம் காரின் நிறம் நொடிப்பொழுதில் மாறிவிடும். இதற்காக, E Ink எலக்ட்ரானிக் பேப்பர் டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தைக் கொண்டு காரின் வெளிப்புறத்தை பி.எம்.டபள்யூ நிறுவனம் வடிவமைத்துள்ளது. இப்போதைக்கு வெள்ளை, கருப்பு மற்றும் கிரே ஆகிய மூன்று நிறங்களை மட்டும் நொடிப்பொழுதில் மாற்றிக்கொள்ளும் வகையில் காரை வடிவமைத்துள்ள பி.எம்.டபள்யூ, இது டிசைன் புரொஜெக்ட் எனக் கூறியுள்ளது. விரைவில், தங்கள் நிறுவனத்தின் எலக்ட்ரானிக் கார்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அறிய வாய்ப்பு 

கோடை காலத்தில் கருப்பு நிறம் வெப்பத்தை அதிகமாக ஈர்க்கும் என்பதால், அந்த நேரத்தில் காரின் கருப்பு நிறத்தை வெள்ளை நிறமாக மாற்றிக் கொள்ளலாம். குளிர் காலத்தில் வெள்ளை நிறத்தில் இருக்கும் காரை கருப்பு நிற கலருக்கு மாற்றிக்கொள்ளலாம். சூழலுக்கு தகுந்தாற்போல் காரின் கலரை மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கார், வாடிக்கையாளர்களிடையே பெரிய வரவேற்பை பெறும் என பி.எம்.டபள்யூ நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News