இதை மட்டும் செய்தால் யூடியூப் அப்டேட்டுகளை முன்னரே தெரிஞ்சுக்கலாம்...!

தினம்தோறும் அப்டேட்டுகளை கொண்டுவரும் யூடியூப் ரகசியங்களை நீங்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 12, 2022, 05:22 PM IST
இதை மட்டும் செய்தால் யூடியூப் அப்டேட்டுகளை முன்னரே தெரிஞ்சுக்கலாம்...! title=

யூடியூப் அசுர வளர்ச்சி இணைய உலகத்தையே பிரம்பிக்க வைக்கிறது. உலகின் மூலை முடுக்களில் இருப்பவர்கள் எல்லாம் யூடியூப் பார்த்து கொண்டிருக்கின்றனர். பொழுதுபோக்கை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்த யூடியூப் வருமான வாய்ப்பையும் பயனர்களுக்கு அள்ளி வழங்கியது, அதனுடைய மற்றொரு மாபெரும் வெற்றி. இதனால், பொழுதுபோக்கை ரசிப்பதோடு, வருமானத்தையும் கோடிக்கணக்கானவர்கள் பெற்று வருகின்றனர். 

யூடியூப் அப்டேட்

மூலை முடுக்குகளிலெல்லாம் யூடியூப் சேனல் தொடங்கி, அதன்மூலம் சிறிய வருவாயை லட்சக்கணக்கானோர் ஈட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட யூடியூப்பில் நாள்தோறும் அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. வருமான வாய்ப்பாக யூடியூப்பை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நிச்சயம் அந்த அப்டேட்டுகள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதவும் பலரும் தெரிந்து வைத்துக் கொள்வதற்கு முன்பே நீங்கள் அறிந்து கொள்வது தான் உங்களின் புத்திசாலித்தனத்துக்கு அடையாளம். 

மேலும் படிக்க | Amazon Pay ஆப்பில் மறைந்திருக்கும் சூப்பர் ஆப்ஷன்! பணத்தை ஈஸியாக சேமிக்கலாம்

யூடியூப் ரகசியம்

அதாவது யூடியூப் அப்டேட்டுகளை நீங்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், யூடியூப் ப்ரீமியம் சந்தாதாரராக மாற வேண்டும். அப்படி நீங்கள் மாறிவிட்டீர்கள் என்றால், யூடியூப் கொண்டு வரும் அப்டேட்டுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். யூடியூப் நிறுவனம், தாங்கள் கொண்டுவரும் அப்டேட்டுகளை ப்ரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கொடுக்கும். அதில் கிடைக்கும் நிறைகுறைகளைக் கொண்டு, அப்டேட்டுகளை மேம்படுத்தி அதன்பின்னரே அனைவருக்குமான அணுகலைக் கொடுக்கும். இதில் பல விஷேஷ அம்சங்கள் இருக்கின்றன. யூடியூப்பில் நீங்கள் மாஸ்டராக இருக்க வேண்டும் என்றால், ப்ரீமியம் உறுப்பினராக மாறுவது சிறந்தது. சந்தாவுக்கு ஏற்ப நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News