App Economy: Mobile செயலிகளுக்காக 6 மாதத்தில் $65 பில்லியன் செலவு!

உலகெங்கிலும் உள்ள மொபைல் போன் பயனர்களிடமிருந்து 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பெறப்பட்ட வருவாய் இதுவரை இல்லாத சாதனைத் தொகை என்று சந்தை கண்காணிப்பாளர் சென்சார் டவர் (Sensor Tower) தெரிவித்துள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 29, 2021, 02:36 PM IST
  • மொபைல் செயலிகளுக்காக ஓராண்டில் $65 பில்லியன் செலவு!
  • ஆப்பிள் மற்றும் கூகிள் ஆப் ஸ்டோருக்கு அதிக வருமானம்
  • விளையாட்டு அல்லாத மொபைல் செயலிகளில் TikTok அதிக வசூல்
App Economy: Mobile செயலிகளுக்காக 6 மாதத்தில் $65 பில்லியன் செலவு! title=

மொபைல் செயலிக்களுக்காக இந்த ஆண்டு மட்டும் மக்கள் கிட்டத்தட்ட 65 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.

உலகெங்கிலும் உள்ள மொபைல் போன் பயனர்களிடமிருந்து 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பெறப்பட்ட வருவாய் இதுவரை இல்லாத சாதனைத் தொகை என்று சந்தை கண்காணிப்பாளர் சென்சார் டவர் (Sensor Tower) தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 65 பில்லியன் என்ற அளவிலான வருவாயை மொபைல் செயலிகள் பெற்றுள்ளன. ஆப்பிள் மற்றும் கூகிள் பயன்பாட்டு தளங்களுக்கு (App Store and Google Play Store) வருவாயை அதிகமாக செய்துள்ளன மொபைல் செயலிகள். நம்பிக்கையற்ற நடைமுறைகளுக்காக கண்காணிப்பு வளையத்திற்குள் வந்தபோதும் கூட மொபைல் செயலிகளின் பதிவிறக்கம் மிகவும் அதிகமாகவே உள்ளன.

Also Read | Tata Motors: 10 எலெக்ட்ரிக் கார்களை வெளியிட டாடா மோட்டர்ஸ் திட்டம்
 
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோருக்கு 64.9 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளதாக சென்சார் டவரின் ஆரம்ப புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன, இது 2020 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் இருந்ததைவிட 25 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் (Apple’s App Store) 41.5 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. ஜூன் இறுதிக்குள், கூகிள் பிளே ஸ்டோரின் வருவாய் 23.4 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டியலில் முதலிடம் வகிக்கும் செயலிகள்

விளையாட்டு அல்லாத மொபைல் செயலிகளில் டிக்டேக் (TikTok) அதிக வசூல் செய்துள்ளது. பயனர்கள் இந்த ஆண்டு சுமார் 920 மில்லியன் டாலர்களை செயலிகளுக்காக செலவிட்டனர் என்று சென்சார் டவர் கூறுகிறது. இது கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களை விட 74 சதவீதம் அதிகம்.  

டிக்டோக்குக்கு பிறகு விளையாட்டு அல்லாத செயலியாக இருப்பது கூகுளுக்குச் சொந்தமான யூடியூப் (YouTube) ஆகும்.   பயனர்கள் 565 மில்லியன் டாலர்களை YouTubeஇல் செலவிடுகின்றனர்.

Also Read | ஜூலை மாதம் அறிமுகமாகும் TOP போன்களின் லிஸ்ட் இதோ!

மொபைல் கேம்களுக்கான செலவு இந்த ஆண்டு 18 சதவீதம் அதிகரித்து 44.7 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. சீனாவின் இணைய நிறுவனமான டென்சென்ட் (Tencent) ஹானர் ஆஃப் கிங்ஸ் விளையாட்டு, அதிக வருமானம் ஈட்டிய மொபைல் விளையாட்டாக உள்ளது. இது 2021 முதல் பாதியில் 1.5 பில்லியன் டாலராக இருந்தது.  

"மொபைல் கேம்களில் நுகர்வோர் செய்யும் செலவானது கடந்த ஆண்டை விட அதிகமாக உள்ளது.  இது, கோவிட் -19 தொற்றுநோயினால் உருவான அசாதாரண சூழ்நிலைகளில் மக்களின் ஆர்வம் மாறுவதைக் குறிக்கிறது" என்று சென்சார் டவர் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. இது, “செயலி பொருளாதாரத்தின்”(app economy) வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தற்போது, ஆப் ஸ்டோரில் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஆதிக்கத்தை உடைக்க எபிக் கேம்ஸ் (Epic Games) முயற்சிக்கிறது. ஆப்பிள் தனது சந்தையை மூன்றாம் தரப்பினருக்கு திறக்கும்படி கட்டாயப்படுத்தவும், செயலிகளினால் ஆப்பிள் நிறுவனம் ஈட்டும் வருவாயைக் கட்டுப்படுத்தவும் Epic Games முயல்கிறது.

Also Read | Airtel வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி; இந்த திட்டங்கள் அதிரடி நீக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News