நீங்கள் உயர் தெளிவுத்திறன் (high resolution photos) கொண்ட புகைப்படங்களைத் தேட வேண்டுமானால், நீங்கள் வழக்கமாக கூகுளுக்கு சென்று தேடுவீர்கள். ஆனால் Googleஇல் உள்ள பெரும்பாலான புகைப்படங்கள் பதிப்புரிமை பெற்றவை.
இணைய உலகம் மிகவும் பரந்து விரிந்துவிட்டது, இங்கு கிடைக்கும் தகவல்களும், விவரங்களும் கணக்கில் அடங்காதவை. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருப்பது சாத்தியமல்ல. ஆனால் இங்குள்ள பெரும்பாலான புகைப்படங்கள் பதிப்புரிமை பெற்றவை, அவை பயன்படுத்த ஏற்றதல்ல, பார்த்து ரசிப்பதற்கு, விஷயங்களை தெரிந்துக் கொள்வதற்குமானது.
unsplash.com வலைதளத்திலிருந்து உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இதுபோன்ற சில வலைத்தளங்களைப் பற்றி சொல்கிறோம். இந்த வலைதளங்களைப் பற்றி பலருக்கு தெரியாமல் இருக்கலாம். உண்மையில் இவை மிகவும் பயனுள்ள websites...
Alternativeto
சீனாவின் பல செயலிகள் நம் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளன. எனவே, அந்த சீன செயலிகளுக்கு மாற்றாக நீங்கள் இந்த தளத்தை முயற்சி செய்து பார்க்கலாம். நீங்கள் மென்பொருள், வலைத்தளம் அல்லது செயலியைப் பயன்படுத்துபவராக இருந்தாலும் சரி, புதிய செயலி அல்லது வலைத்தளத்தைப் பயன்படுத்த விரும்பினாலும், இந்த தளத்தை ஒரு முறை பார்வையிடலாம். வலைத்தளங்கள் மற்றும் செயலிகளின் மிகப்பெரிய தரவுத்தளம் இங்கே உள்ளது. ஒரு மென்பொருள் அல்லது செயலியை தேடி, அதைப் பயன்படுத்தலாம். மேலும், புதிய மற்றும் பிரபலமான செயலிகளைப் பற்றிய தகவல்களும் இங்கே காணப்படுகின்றன.
Unsplash
அண்மையில் இணையத்தில் உயர் தரமான, உயர் தெளிவுத்திறன் மற்றும் ராயல்டி இல்லா புகைப்படங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம், ஆனால் Unsplash என்பது சிறந்த மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை கொண்ட வலைதளம். இங்கு நீங்கள் புகைப்ப்டங்களைத் தேடலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம். இது ஒரு சமூக தளம், அங்கு பலரும் பகிர்ந்துக் கொண்ட ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் உள்ளன. புகைப்படங்களின் வெவ்வேறு பிரிவுகள் இங்கே வகைப்படுத்தப்பட்டுள்ளன. இது, புகைப்படங்களை வேகமாக தேட உதவுகிறது. நீங்கள் விரும்பினால், பதிவிறக்கம் செய்யப்பட வேண்டிய படங்களுடன், அதற்கான புகைப்படக் கிரெடிட்டையும் கொடுக்கலாம், அது உங்கள் விருப்பமே. வால்பேப்பர்களைத் தேடுவதற்கான சிறந்த தளமும் இது.
Noisli
அதிக ஓசை காரணமாக, நிறைய பேர் பணியில் சரியாக கவனம் செலுத்த முடியவதில்லை, இதுபோன்ற சூழ்நிலையில், சத்தமில்லாத வலைத்தளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக இந்த சூழ்நிலை அலுவலகத்தில் அடிக்கடி ஏற்படும். இது ஒரு உற்பத்தித்திறன் கருவியாகும், இது பணியின் போது உங்கள் கவனத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்த உதவும். இது தேவையற்ற சத்தத்தை குறைப்பதன் மூலமும், சிறந்த பணிச்சூழலை உருவாக்குவதன் மூலமும் ஓய்வெடுக்க உதவுகிறது. இந்த தளத்தின் உதவியுடன் உங்களுக்கு பிடித்த பின்னணி ஒலியைக் கேட்கலாம், இது பணிகளின் போது கவனத்தைத் தக்கவைக்க உதவும். iOS சாதனங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம்.
Also Read | பூமியில் உள்ள அனைவரும் கோடீஸ்வரர்களா! நிஜமாகப் போகும் கற்பனைக்கு வித்திடும் நாசா...