ஏர்டெல்லின் வேற லெவல் புதிய சலுகை: ரூ.149-க்கு 56 ஜிபி!!

வெறும் ரூ.149-க்கு 56 ஜிபி டேட்டா வழங்கி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம்!  

Last Updated : Jun 10, 2018, 04:19 PM IST
ஏர்டெல்லின் வேற லெவல் புதிய சலுகை: ரூ.149-க்கு 56 ஜிபி!! title=

வெறும் ரூ.149-க்கு 56 ஜிபி டேட்டா வழங்கி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம்!  

தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் டெலிகாம் நிறுவனங்கள் தினத்தோறும் புதிய சலுகைகளை போட்டி போட்டுக்கொண்டு அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள ஜியோ-வை மிஞ்சும் அளவுக்கு புதிய சலுகைகளை வாரி இறைத்து வருகிறது. தற்போது, ஏர்டெல் ரூ.150-க்கு சுமார் 56 ஜிபி தரவை வழங்குகிறது. 

ஏர்டெல்-ன் ரூ.149 திட்டம்!!

> 3ஜி/4ஜி வேகத்தில் தினமும் 2-ஜிபி தரவை வழங்குகிறது.

> அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

> தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

> இந்த சலுகை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், இந்த சலுகையானது குறிப்பிடத்தக்க வாடிக்கையாலகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த திட்டத்தை பெற விரும்பும் ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் 'மைஏர்டெல்' செயலியை பயன்பாடுத்தி அல்லது ஏர்டெல் நிறுவனத்தின் இணையத்தளத்தில் தங்களின் தொலைபேசி எண்ணுக்கு கிடைக்குமா என்பதை தெளிவுபடுத்து ரீ-சார்ஜ் செய்து கொள்ளவும். 

 

Trending News