நெற்குன்றம் அடுத்த முகப்பேர் பகுதியில் ரேணுகா என்ற உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்திற்கு இன்று உணவு வாங்க வந்த நபர் பாஸ்புட் தயாரிக்க பயன்படுத்தப்படும் கறி வெட்டும் கட்டையில் கறியோடு சேர்ந்து புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இதுக்குறித்து கடையின் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் படிக்க | போதை பொருள் விற்பனையில் பாஜகவினர் - ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரிடம் ஊழியர்கள் தகாத வார்த்தையில் பேசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உணவு வாங்க வந்த இளைஞர் தனது செல்போனில் கறி வெட்டக்கூடிய கட்டை மற்றும் கறிகளில் புழுக்கள் இருப்பதை வீடியோவாக எடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு புகார் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கறி வெட்டக் கூடிய கட்டையில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், உணவகம் முழுவதையும் ஆய்வு செய்ததில் உணவகத்தில் தரமற்ற இறைச்சிகள், உணவு பொருட்கள், இருந்ததை உடனடியாக பறிமுதல் செய்தனர். மேலும் கடையை இழுத்து மூடி பூட்டு போட்டு கடைக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கியும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். உணவகத்தில் கறி வெட்டும் கட்டை மற்றும் பாஸ் பாஸ்புட் தயாரிக்க பயன்படுத்தும் கறியில் புழுக்கள் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | உதயநிதிக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை! பின்வரிசையில் திமுக மூத்த அமைச்சர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR