விமான நிலையங்கள், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் அளிக்கப்படும் இலவச 'வைபை' பயன்படுத்தினால், சைபர் தாக்குதலுக்கு உள்ளாக அபாயம் உள்ளதாக மத்திய அரசின் இந்திய கணிப்பொறி அவசர கால மீட்பு குழு எச்சரித்துள்ளது.
இது குறித்து, வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிக்கை:-
பொது இடங்களில் பயன்படுத்தப்படும் ‛வைபை' களில் சைபர் தாக்குதலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மொபைல் போனில் வைக்கப்பட்டிருக்கும் மக்களின் பர்சனல் விவரங்கள் திருடப்படும் அபாயம் உள்ளது.
இதனால், பொது மக்கள் பொது இடங்களில் ‛வைபை' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசின் இந்திய கணிப்பொறி அவசர கால மீட்பு குழு எச்சரித்துள்ளது.