புதுடெல்லி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தனது அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ளார். ரஜினிகாந்த் தனது சொந்த அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் (Rajinikanth) தனது அரசியல் கட்சியை இந்த மாதத்தில் அறிவிப்பார். அதே நேரத்தில், அடுத்த ஆண்டு அவர் தனது கட்சியைத் தொடங்கி அரசியலில் நுழைவார். இருப்பினும், ஒரு நடிகர் அரசியல்வாதியாக மாறுவது இது முதல் முறை அல்ல. ரஜினிகாந்திற்கு முன்பே, பல நடிகர்கள் அரசியல் இன்னிங்ஸில் விளையாடியுள்ளனர். இருப்பினும், தங்கள் அரசியல் கட்சியில் உயர் பதவியை அடைந்த நடிகர்கள் மிகக்குறைவு.
தமிழக அரசியலில் நான்கு முக்கிய பெயர்கள் உள்ளன. அவர்கள் திரைப்பட உலகத்திலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள் என்றாலும் அரசியல் இன்னிங்ஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர். இது மட்டுமல்லாமல், அரசியல் பயணத்தில் அவர்களுக்கு முதல்வர் நாற்காலியும் (Chief Ministers of Tamil Nadu) கிடைத்தது. இதில் எம் கருணாநிதி (Karunanidhi), எம்.ஜி.ராமச்சந்திரன் (MG Ramachandran), ஜானகி ராமச்சந்திரன் (Janaki Ramachandran), ஜெயலலிதா (Jayalalithaa) ஆகியோரின் பெயர்கள் அடங்கும். இந்த நான்கு பேரும் திரைப்படத் திரையில் இருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர் மற்றும் அரசியல் வாழ்க்கையின் போதே உலகத்திலிருந்து விடைபெற்றனர்.
ALSO READ | Rajini as a Politician: அரசியல்வாதியாக தேர்தல் களத்தில் நுழையும் சூப்பர் ஸ்டார்
எம்.ஜி.ராமச்சந்திரன் (M. G. Ramachandran):
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் அதாவது எம்.ஜி. ராமச்சந்திரன் 17 ஜனவரி 1917 இல் பிறந்தார். எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழ் சினிமா முதல் மற்றும் அரசியல் வரை ஒரு பெரிய ஆளுமையாக பார்க்கப்படுகிறார். அவர் எம்.ஜி.ஆர் (MGR) என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். ராமச்சந்திரன் தனது திரைப்பட வாழ்க்கையை 1936 இல் தொடங்கினார். அவர் பெரும்பாலும் காதல் மற்றும் ஆக்ஷன் படங்களில் நடிப்பதைக் காண முடிந்தது. எம்.ஜி.ஆர் 1953 வரை காங்கிரஸ் (Congress) கட்சியில் உறுப்பினராக இருந்தார். இதன் பின்னர், அவர் திமுகவில் சேர்ந்தார். தமிழ்நாட்டில் சமூக நீதிக்காக போராடி வந்த திராவிட இயக்கத்திற்கு (DMK) எம்.ஜி.ஆர் சினிமா கவர்ச்சி மிகவும் பயனை தந்தது. திமுக சார்பாக எம்.ஜி.ஆர் 1962 இல் மாநில சட்டப்பேரவை உறுப்பினரானார் மற்றும் 1967 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் பின்னர், 1972 இல் எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து பிரிந்து அதிமுக என்ற கட்சியை உருவாக்கினார். இதன் பின்னர், ஜூன் 1977 முதல் பிப்ரவரி 1980 வரை அதிமுக கட்சி சார்பாக முதல்வராக பணியாற்றினார். இதன் பின்னர், 1980 ஜூன் மாதம் இரண்டாவது முறையாக முதல்வரானார். 1984 நவம்பர் வரை முதல்வராக இருந்தார். அதே நேரத்தில், 1985 பிப்ரவரியில் மூன்றாவது முறையாக தமிழக முதல்வரானார். அவர் இறக்கும் வரை முதல்வர் பதவியில் இருந்தார். அவர் 24 டிசம்பர் 1987 அன்று சென்னையில் காலமானார். தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான தலைவராக இருந்த எம்.ஜி.ஆர் மறைவை அடுத்து, துக்கத்தை தாங்க முடியாமல் பலர் தங்கள் உயிரை விடத் தயாராக இருந்தனர்.
ALSO READ | மாபெரும் தலைவர், திரையுலகின் அடையாளம் திரு எம்.ஜி.ஆர்!!
ஜானகி இராமச்சந்திரன் (V. N. Janaki):
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஜானகி ராமச்சந்திரனும் (Janaki Ramachandran) தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். ஜானகி இராமச்சந்திரன் 1923 நவம்பர் 30 அன்று பிறந்தார். அவரது வாழ்க்கையும் திரைப்பட உலகத்துடன் சம்பந்தப்பட்டது. அவரது திரைப்பட வாழ்க்கையில், 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஜானகி ராமச்சந்திரனின் இரண்டாவது கணவர் எம்.ஜி.ராமச்சந்திரன். எம்ஜிஆர் மற்றும் ஜானகி ராமச்சந்திரன் ஆகியோரும் பல படங்களில் ஒன்றாக நடித்தனர். அதே சமயம், எம்.ஜி.ஆரின் உதவியுடன் ஜானகி அரசியலுக்கு வந்தார். எம்ஜிஆர் இறந்த பிறகு, ஜானகி தமிழக முதல்வராக பதவியேற்றார். ஜானகி 1988 ஜனவரி 7 முதல் 1988 ஜனவரி 30 வரை அதிமுக சார்பாக மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜானகி ராமச்சந்திரன் தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை பெற்றார். அவரது பதவிக்காலம் 23 நாட்கள் மட்டுமே என்றாலும். அவர் மே 19, 1996 அன்று காலமானார்.
ALSO READ | பங்கேற்ற 13 தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே தீர்ப்பாக பெற்ற தலைவர் கருணாநிதி
எம் கருணாநிதி (M. Karunanidhi):
மு. கருணாநிதி (Muthuvel Karunanidhi) என அழைக்கப்பட்ட முத்துவேல் கருணாநிதி தமிழக அரசியலில் மிகப்பெரிய பெயர். அவர் 3 ஜூன் 1924 இல் பிறந்தார். கருணாநிதியும் சினிமா உலகத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கருணாநிதி ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக நீதி பார்வைக்கொண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார். தனது ஆரம்ப சினேமா தொழில் வாழ்க்கையில் கருணாநிதி நாடகங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுவார். அதே நேரத்தில், தமிழ் திரையுலகில் திரைக்கதை எழுத்தாளராகவும் பயணித்தார். இருப்பினும் கருணாநிதி விரைவில் தனது ஞானம் மற்றும் பேச்சு திறன் மூலம் முக்கிய அரசியல்வாதியாக உருவெடுத்தார். அவர் திராவிட இயக்கத்தில் பேரரிஞர் அண்ணாவுடன் சேர்ந்து சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். திமுக அரசியல் கட்சியாக வளர்ந்ததும், அவர் அரசியல் உலகில் காலடி வைத்தார். திமுக நிறுவனர் சி.என். அண்ணாதுரை (C. N. Annadurai) இறந்த பிறகு, கருணாநிதி திமுக கட்சியின் அதன் தலைவரானார் மற்றும் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தார் (1969-71, 1971-76, 1989-91, 1996-2001 மற்றும் 2006-2011). கலைஞர் கருணாநிதி ஆகஸ்ட் 7, 2018 அன்று தனது 94 வயதில் காலமானார்.
ALSO READ | ஜெயலலிதாவும் அப்போலோ மருத்துவமனையும்... அந்த 75 நாட்கள் பிளாஷ்பேக்!!
ஜெயலலிதா (J. Jayalalithaa)
ஜெயலலிதா தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருதவர். அவrருக்காக பொதுமக்கள் சாகக்கூடத் தயாராக இருந்தனர். ஜெயலலிதாவும் (Jayalalithaa) தனது வாழ்க்கையை திரைப்பட உலகத்திலிருந்து தொடங்கினார். ஜெயலலிதா 24 பிப்ரவரி 1948 இல் பிறந்தார். ஜெயலலிதா பள்ளியில் படிக்கும் போதே திரைப்படங்களில் பணியாற்றும்படி, அவரது தாயார் அவரை தயார் படுத்தினார். 15 வயதில், கன்னட படங்களில் முன்னணி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். கன்னட மொழியில் அவரது முதல் படம் சின்னடா கொம்பே'. இது 1964 இல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ் சினிமாவில், பிரபல இயக்குனர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை" (Vennira Aadai) படம் மூலம் ஜெயலலிதா தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் சுமார் 300 படங்களில் நடித்தார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி படங்களிலும் ஜெயலலிதா பணியாற்றினார். எம்.ஜி. ராமச்சந்திரனுடன் சேர்ந்து நிறைய படங்களில் நடித்துள்ளார்.
இதன் பின்னர், 1982 ஆம் ஆண்டில் அதிமுக கட்சியில் உறுப்பினரானார். எம்.ஜி. ராமச்சந்திரனுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா மாநிலத்தின் முதல்வாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். (1991-1996, மே 2001- செம்டம்பர் 2001, 2002-2006, 2011-2014, 23 மே 2015 முதல் 22 மே 2016 வரை மற்றும் 23 மே 2016 முதல் 5 டிசம்பர் 2016 வரை என அவர் இறக்கும் வரை முதல்வர் பதவியை வகித்தார். ஜெயலலிதா 5 டிசம்பர் 2016 அன்று சென்னையில் காலமானார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR