விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஜிஎஸ்டி குறித்த வசனங்களை தவறானவை அதனால் அக்காட்சியை நீக்க வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் 100-வது படமாக நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவந்த படம் மெர்சல். பல தடைகளுக்கு பிறகு இந்த படம் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இதில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி பற்றியும், டிஜிட்டல் இந்தியா திட்ட செயல்பாடுகளைப் பற்றியும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் மெர்சல் படத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி:-
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி பற்றியும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை குறித்து விமர்சித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். '
When they mislead about Govt schemes(#GST,#DigitalIndia)then we have to condemn&want scenes removed from film:T Soundararajan,BJP on #Mersal pic.twitter.com/iSHrOBBHZu
— ANI (@ANI) October 20, 2017
இவ்வாறு தெரிவித்துள்ளார்.