Vikravandi bypoll: விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை! முன்னிலையில் யார் யார்?

Vikravandi bypoll: திமுக எம்எல்ஏ புகழேந்தி மரணமடைந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Written by - RK Spark | Last Updated : Jul 13, 2024, 11:09 AM IST
  • திமுக வேட்பாளர் விக்கிரவாண்டியில் முன்னிலை.
  • பாமக, நாம் தமிழர் பின்னடைவு.
  • விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
Vikravandi bypoll: விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை! முன்னிலையில் யார் யார்? title=

கடந்த ஜூலை 10ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமாக 29 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இருப்பினும் இந்த தொகுதியில் மும்முனை போட்டியே நிலவியது. அதிமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தவுடனேயே பாமக, திமுக, நாம் தமிழர் இடையே கடும் போட்டி நிலவியது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் சார்பில் அபிநயா, பாமக சார்பில் அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட்ட புகழேந்தி, அதிமுக வேட்பாளரை விட 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். எதிர்பாராதவிதமாக புகழேந்தியின் மரணமடைய இந்த சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம்... நீதிமன்றம் அனுமதி - அடக்கம் செய்யும் இடமும் உறுதியானது!

ஜூலை 10ம் நடைபெற்ற வாக்குப்பதிவில் விக்கிரவாண்டி தொகுதியில் 82.48% வாக்குகள் பதிவானது. 2021ல் கிட்டத்தட்ட 82.53 சதவீதம் பதிவான நிலையில் இந்த முறை 0.05% குறைவாக பதிவாகி இருந்தது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி திமுக எம்எல்ஏ என் புகழேந்தி மரணமடைந்ததை தொடர்ந்து 276 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் காதுகாப்பு பணியில் ஈடுபட எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் வாக்கு பதிவு நடைபெற்றது. அதிமுகவின் வாக்குகளை பெற பாமகவும், திமுகவும் முட்டி மோதி கொண்டன. பாமக பிரச்சாரம் செய்த இடங்களில் ஜெயலலிதாவின் புகைப்படங்களை பயன்படுத்தி இருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை

காலையில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதன் எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை பெற்றார். பிறகு EVM மிஷினில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதிலும் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் முன்னிலை வகித்தார். ஆரம்பத்தில் 100, 200 என இருந்த வாக்கு வித்தியாசம் பிறகு 1000 கணக்கில் மாறியது. தற்போது வரை பதிவான வாக்குகளில் திமுகவை சேர்ந்த அன்னியூர் சிவா 26235 வாக்குகளும், பாமகவை சேர்ந்த சி அன்புமணி 12977 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அபிநயா 2441 வாக்குகளும் பெற்றுள்ளனர். பாமக வேட்பாளரை விட அன்னியூர் சிவா 13000 வாக்குகள் முன்னிலையில் உள்ளதால் அவரே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு திமுகவின் பதில்... ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News