வந்தாச்சு வேலைக்காரன் இசை வெளியீடு தேதி!

 டிசம்பர் 3-ம் தேதி  வேலைக்காரன் திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா என்று இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 24, 2017, 07:30 PM IST
வந்தாச்சு வேலைக்காரன் இசை வெளியீடு தேதி! title=

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன, நயன்தாரா இணைந்திருக்கும் இப்படம் வருகிற 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22-ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் 

நடித்துள்ளனர். 

ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அனிருத்தின் இசையில் உருவான 'இறைவா' என்ற பாடல் ஏற்கனவே சுப்பர் ஹிட் 

ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு எப்போது என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக கூறியிருந்தனர். 

தற்போது இப்படத்தின்  இசையமைப்பாளர் அனிருத் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், டிசம்பர் 3-ம் தேதி  வேலைக்காரன் திரைப்படத்தின்  இசை வெளியீட்டு விழா என்று தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து 'இறைவா' பாடலுக்கு நல்ல வரவேர்ப்பு கிடைத்தது என்றும் இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்ப்பை அடையும் என்றும் அவர் கூறி இருந்தார். 

Trending News