Annamalai vs Gayathri Raghuram: கடந்த சில மாதங்களாகவே பாஜகவுக்குள் உட்கட்சி பூசல் அதிகமாகவே இருந்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு எதிராக அக்கட்சியின் பெண் பிரமுகர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். பெண்களுக்கு கட்சியில் பாதுகாப்பு இல்லை எனவும், பெண்கள் அளிக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் தொடர்ந்து ஒருசிலர் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் பாஜகவின் முக்கிய பெண் பிரமுகராக இருந்த காயத்ரி ரகுராம் தொடர்ந்து தன்னைப் பற்றி அண்ணாமலை பொது வெளியில் அவதூறாக பேசி வருவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதோடு இரு தினங்களுக்கு முன்பு பாஜக கட்சியின் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்திய காயத்ரி ரகுராம், அண்ணாமலை என்னுடன் நேருக்கு நேர் பேசத்தயாரா என சவால் விடுத்தார்.
இந்த பேட்டி வைரலானதை அடுத்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, கட்சியை விட்டு வெளியில் செல்வோரை வாழ்த்தி வழி அனுப்புவதே எனது வழக்கம் என பேசினார். அதோடு திமுகவுடன் தவறான உறவில் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அண்ணாமலைக்கும் பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவுக்கு ஆதரவாக ஊடகங்கள் செயல்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியின் சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. அவர் தனது பெண் தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. 20 வயது கூட ஆகாத நிலையில், இப்படி அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக வேண்டிமென்றே சிலர் இந்த புகைப்படங்களை இணையத்தில் லீக் செய்ததாக பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். அதோடு உதயநிதி மகனின் சொந்த வாழ்க்கையை இப்படி சோஷியல் மீடியாவில் கசிய வைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில், தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். காயத்ரியின் இந்த பதிவை அடுத்து, அண்ணாமலை தான் இந்த வேலையை செய்தாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்பட சர்ச்சை குறித்து இதுவரை திமுக தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை.
— Gayathri Raguramm (@Gayathri_R_) January 4, 2023
மேலும் படிக்க: காயத்ரி ரகுராம் வைத்த குற்றச்சாட்டு - வாக்குவாதத்தில் அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ