கொடூரம்..கொடூரம்.. கொடூர மனித மிருகங்களால் 14 வயது சிறுமி தீக்கிரையாக்கப்பட்டார்.

14 வயது சிறுமி ஒருவர், கொடூர மனித மிருகங்களால் தீக்கிரையாக்கப்பட்டார். உடலில் பெரிய தீக்காயங்களுடன் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 12, 2020, 07:10 AM IST
கொடூரம்..கொடூரம்.. கொடூர மனித மிருகங்களால் 14 வயது சிறுமி தீக்கிரையாக்கப்பட்டார். title=

விழுப்புரம்: அதிர்ச்சி, வேதனை, கவலையூட்டும் சம்பவம் தமிழ்நாட்டின் வில்லுபுரம் (Villupuram) மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அரங்கேறி உள்ளது. ஆம், 14 வயது சிறுமி ஒருவர், கொடூர மனித மிருகங்களால் தீக்கிரையாக்கப்பட்டார். உடலில் பெரிய தீக்காயங்களுடன் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஜி முருகன் (Murugan  - வயது 52), கே கலியபெருமாள்(Kaliyaperumal - வயது 60) ஆகிய இரு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும் ஆளும் அதிமுக (AIADMK) உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் முருகன் முன்னாள் கவுன்சிலரின் (Councillor) கணவர் ஆவார். 

ஜெயஸ்ரீ (Jayasree) தனது தந்தையுடன் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சிறுமாதுரை கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது தந்தை ஜெயபால் (Jayabal) அவர் வசிக்கும் பகுதியில் ஒரு சிறிய கடை வைத்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை, காலை, அங்கு வந்த முருகன் கடையை இப்பவே திறக்க வேண்டும் எனக்கூற ஜெயபாலின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த சமயம் ஜெயபால் வீட்டில் இல்லாததால், அவரது மகள் ஜெயஸ்ரீ கடையைத் திறக்க மறுத்து விட்டார். மிருகத்தனமான நிலையில் இருந்த முருகன், அந்த இடத்தை விட்டு அப்பொழுது  வெளியேறிவிட்டார்.

சில மணி நேரம் கழித்து, வீட்டிலிருந்து புகை வெளியே வந்ததை பார்த்த, அக்கம்பக்கத்தினர் வீட்டை நோக்கி ஓடி உள்ளனர். அங்கு சிறுமி ​​ஜெயஸ்ரீ இரு கைகள் கட்டப்பட்ட நிலையில், அவரது உடல் தீயினால் எரிந்துக்கொண்டு இருதது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக தண்ணீர் ஊற்றி, அணைத்து சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (Villupuram Medical College Hospital) கொண்டு சென்றனர் என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

முருகனும் ஜெயபாலும் உறவினர்கள். இருவருக்கும் முந்தைய விரோத வரலாறு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. "ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, முருகனும் அவரது நண்பர்கள் குழுவும் ஜெயபாலின் மாமாவின் கையை வெட்டினர். அந்த சம்பவத்தை அடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஆனால் இரு குழுக்களுக்கிடையில் நிலம் தொடர்பான மோதலும் ஏற்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக இரு குடும்பங்களுக்கும் இடையே அவ்வப்போது சின்ன சின்ன தகராறு ஏற்பட்டு வந்துள்ளது என்று மேலும் போலீஸ் அதிகாரி கூறினார்.

மேலும், உயிருக்கு போரட்டிக்கொண்டு இருந்த சிறுமி, இறப்பதற்கு முன்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், முருகன் மற்றும் யாசகன் என்ற கலியபெருமாள் இருவரும் தான், தன் கைகளை கட்டி, என் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக ஜெயஸ்ரீ மாஜிஸ்திரேட்டுக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். அவரது அறிக்கையின் அடிப்படையில், வில்லுபுரம் போலீசார் முருகன் மற்றும் காளியபெருமால் இருவரையும் கைது செய்துள்ளனர்.

அவர்கள் அதிமுக (AIADMK) உறுப்பினர்கள். ஆனால் குற்றம் யார் செய்தாலும், சட்டம் முன் நிறுத்தப்படுவார்கள். மேலும் குற்றத்தை நாங்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எஃப்.ஐ.ஆரும் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. வேற யாரவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா எனவும் விசாரித்து வருவதாக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் கூறியுள்ளார். 

அவர்கள் மீது 302, 452, 341, 342, 294 பி, 323, மற்றும் 324 ஆகிய சட்டப்பிரிவின் (IPC) கீழ் வழக்கு பதிவு செயப்பட்டு உள்ளது.

மேலும் அதிமுக உறுப்பினர்களால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் இந்த வழக்கு குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவு.

 

Trending News