மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கு ஆயுள் தண்டனை

7ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 19, 2022, 07:34 PM IST
  • இசிஆர் விடுதியில் அரங்கேறிய கொடூரம்
  • 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை
  • ரூ.10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கு  ஆயுள் தண்டனை title=

சென்னை தி.நகர் பகுதியில் 29 வயது ஆசிரியை ஒருவர், தன்னிடம் டியூசன் படித்து வந்த 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை தனது காதலருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிக்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.அங்கு அந்த சிறுமியை ஆசிரியையின் காதலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுமியை மிரட்டி, ஆசிரியை தங்க நகை மற்றும் பணம் பெற்று வந்துள்ளார்.இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி ஆசிரியை மற்றும் காதலரை கைது செய்தனர்.

child abuse,child sexual abuse,child,child maltreatment

இதுதொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். ராஜலெட்சுமி முன் நடைபெற்றது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குற்றச்சாட்டுகள் நிரூபணமாவதாகக் கூறி, இளம் பெண்ணுக்கும் அவரின் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும் டியூசன் ஆசிரியைக்கு 70 ஆயிரம் ரூபாயும், காதலருக்கு 60 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News