தங்கத்தின் விலை குறைந்து; சென்னையில் தங்கம் வாங்கலாமா?

சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை ரூ .5278 ஆகவும், அதேபோல 24 காரட் தங்கத்தின் சில்லறை விலை ரூ .5656 ஆகவும் உள்ளது. இந்த விலை ஒவ்வொரு மணி நேரமும் மாற்றத்திற்கு உட்பட்டவை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 11, 2020, 04:59 PM IST
தங்கத்தின் விலை குறைந்து; சென்னையில் தங்கம் வாங்கலாமா?  title=

Today Gold Rate News: சென்னையில் முந்தைய நாளான தங்க வீதத்துடன் ஒப்பிடும்போது, இன்று சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை (Gold Rate) ரூ .84 குறைந்து 5278 ரூபாயாகவும், சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை ரூ .84 குறைந்து 5656 ரூபாயாகவும் உள்ளது.

அதாவது இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.984 குறைந்துள்ளது. அதாவது தற்போது நிலவரப்படி ஒரு பவுன் தங்கமத்தின் விலை ரூ.41,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் (Gold Rate in Chennai) இன்று 22 காரட் தங்கத்தின் விலை ரூ .5278 ஆகவும், அதேபோல 24 காரட் தங்கத்தின் சில்லறை விலை ரூ .5656 ஆகவும் உள்ளது. இந்த விலை ஒவ்வொரு மணி நேரமும் மாற்றத்திற்கு உட்பட்டவை.

ALSO READ |  வரலாறு காணாத விலையில் தகதகக்கும் தங்கம்! வெற்றி விழா காணும் வெள்ளி!!

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ரூ.5,242க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலையில் சற்று இறக்கம் ஏற்பட்டுள்ளது. 

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்து, ரூ.42,512க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.51 குறைந்து ரூ.5,314க்கு விற்பனையானது.

ஒரு கிராம் வெள்ளியின் (Silver Rate) விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.84.90க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.37,616க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறையாமல் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது.

ALSO READ |  டிஜிட்டல் தளத்திற்கு செல்லும் நகை வியாபாரம்.. இனி தங்க நகைகள் வாங்குவது எளிதாக இருக்கும்.

Trending News