எழுத்தாளர் கி.ரா-வின் மறைவிற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்ற நூற்றாண்டின் கரிசல் காட்டுத் தமிழ்புலத்தின் ஆகச்சிறந்த  எழுத்தாளரான கி.ராஜநாரயணன் அவர்களின் மறைவுக்கு தமிழுலகமே கண்ணீரஞ்சலி செலுத்துகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 18, 2021, 12:28 PM IST
எழுத்தாளர் கி.ரா-வின் மறைவிற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் title=

கரிசல் பூமியின் அடையாளமான கி.ரா எனும் கி.ராஜநாரயணன் 98 வயதில் இயற்கை எய்தினார்.  தமிழின் தனிப் பெரும் வளத்தை காலம் கரைத்து விட்டது. உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர் வயது மூப்பின் காரணமாகவே சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் 

கீழ்தட்டு மக்களின் வாழ்க்கையை எளிமையாக எழுதி நிதர்சனத்தை புரிய வைத்தவர் கி.ரா. சென்ற நூற்றாண்டின் கரிசல் காட்டுத் தமிழ்புலத்தின் ஆகச்சிறந்த  எழுத்தாளரான கி.ராஜநாரயணன் அவர்களின் மறைவுக்கு தமிழுலகமே கண்ணீரஞ்சலி செலுத்துகிறது. 

சாகித்ய அகாடமி விருது பெற்ற அவரது எழுத்துக்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், மறைந்த எழுத்தாளர் கி.ரா. உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், எழுத்தாளர் கி.ராவின் மறைவுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்,அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மறைவுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ALSO READ |Ki.Ra: கரிசல் பூமியின் அடையாளம்; முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தார்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News