ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத, உதவாக்கரை பட்ஜெட்: ஸ்டாலின்!

1 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் போது, அதுகுறித்த எந்த அறிவிப்பும் தமிழக பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்! 

Last Updated : Feb 8, 2019, 01:33 PM IST
ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத, உதவாக்கரை பட்ஜெட்: ஸ்டாலின்!   title=

1 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் போது, அதுகுறித்த எந்த அறிவிப்பும் தமிழக பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்! 

2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தமிழக துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். சுமார் இரண்டரை மணிநேரம் சட்டசபையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் சங்கீத வித்துவான் போல ஓ.பன்னீர் செல்வம் சொன்னதையே சொல்லியுள்ளார் என்று தமிழக பட்ஜெட் மீது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. வேலை வாய்ப்பை மேம்படுத்துவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. இது ஏமாற்றமாக இருக்கிறது. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. ஆனால், வருவாயை அதிகரிக்க எந்த அறிவிப்பும் இல்லை.

நிதி மேலாண்மை மோசமான தோல்வியை சந்திப்பதை பட்ஜெட் காட்டுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததே தேர்தல் நடக்காததற்கு காரணம். கோடநாடு கொள்ளை போன்று தமிழ்நாட்டை அடிப்பதற்கு பட்ஜெட் போடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் விலையை அரசு உயர்த்தவில்லை.

ரபேல் விவகாரத்தில் பிரதமரே நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதற்கு பாதுகாப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளதை இந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக விசாரணை தேவை” என்று அவர் கூறினார்.  

 

Trending News