TN Budget 2024: தமிழக பட்ஜெட்டில் வெளியாகிய முக்கிய அறிவிப்புகள்!

Tamil Nadu Budget 2024: தமிழக அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபட்டுள்ளது. பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 19, 2024, 10:50 AM IST
  • சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்.
  • நிறைய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
  • தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
TN Budget 2024: தமிழக பட்ஜெட்டில் வெளியாகிய முக்கிய அறிவிப்புகள்!  title=

Tamil Nadu Budget 2024: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி சாமானிய மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது. பள்ளி மாணவ மாணவிகள் முதல் ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித் தருவது வரை நிறைய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | Tn budget: இன்று தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்: எதிர்பார்ப்புகள் என்னென்ன?

பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:

- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தமிழக அரசின் பட்ஜெட்டில் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- குடும்ப தலைவிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு கூடுதலாக 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- ஏழை எளிய மாணவர்கள் பயன்பெற்று வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- அடுத்த 3 ஆண்டுகளில் 600 முக்கிய நூல்கள் தமிழில் மொழிப்பெயர்க்கப்படும். இதற்காக பட்ஜெட்டில் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை நவீனப்படுத்த கிமி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- வரும் 2030ம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழகம் அமைய 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது.

- தற்போது போக்குவரத்துக்கு அதிகமாகி உள்ளதால் 2024-25 சாலை மேம்பாட்டிற்கு 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- 5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றிட முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைபிற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல கீழடியில் 
திறந்தவெளி அரங்கம் அமைக்க ரூ. 17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 3500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- அடியாறு நதி நீரமைப்பிற்கு ரூபாய் 1500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- மகளிர் உரிமை தொகை திட்டம் 1கோடியே 15லட்சம் குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்காக 13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- புதுமை பெண் வழங்கும் திட்டம் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கு விரிவுப்படுத்தப்படும்

- மலைப்பகுதிகளில் விடியல் பயணத்திற்கு 3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- மூன்றாம் பாலினத்தோரின் கல்லூரி படிப்புகளான முழுச்செலவை அரசே ஏற்கும்

- தோழி புதிய விடுதிகள் அமைக்க ரூ. 26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழ்நாடு பட்ஜெட் 2024: புதிய அறிவிப்புகள் என்ன? முக்கிய அம்சங்கள் என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News