கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொள்ளாச்சியில் இருக்கும் கயிறு தொழிற்சாலைகளில் ஆளும் கட்சியினர் பணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டினார். இது குறித்து முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், கைத்தறி நெசவு தொழில்களுக்கு 12 விழுக்காடாக அதிகரிக்கப்பட உள்ள ஜி.எஸ்.டி.வரியை குறைக்க கோரிக்கை வைக்க உள்ளதாக கூறினார். மேலும், தமிழக அரசும் மாநில அரசின் சார்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
AKSO READ | ரிலையன்ஸ் வசம் செல்லும் மத்திய உணவுக்கிடங்குகள்?
கேரளாவில் பா.ஜ.க பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து பேசிய வானதி சீனிவாசன், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் நீண்ட காலங்களாக சித்தாந்த அடிப்படையில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். மத ரீதியாகவும், மத தீவிரவாதத்தை வளர்க்கும் குழுக்களுக்கும் கம்யூனிஸ்டுகள் ஆதரவாக இருப்பதாக கூறிய அவர், தற்போது நடந்துள்ள படுகொலைகள் குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். இதனை கேரளா பா.ஜ.க தலைவரும் வலியுறுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
திட்டமிட்டு நடத்தப்படும் படுகொலைகள் குறித்து மாநில அரசுகள் விசாரிப்பதை விட்டுவிட்டு, வழக்கு விசாரணை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். மேலும், பா.ஜ.க தலைவர்கள் மதம் மற்றும் மத ரீதியான கருத்துகளையும், பிரச்சனைகளையும் பேசுவதில் தவறிக்கை என்றும் அவர் கூறினார். மத சார்ந்த விஷயங்களில் வல்லுநர்களாக இருப்பவர்கள் பேசட்டும் என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.
ALSO READ | நேரு விளையாட்டு அரங்க கழிப்பறைகளில் குவிந்து கிடக்கும் ஊக்க மருந்து பாட்டில்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR