TN agriculture budget 22-23: வேளாண் சார்ந்த தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி

வேளாண் சார்ந்த தொழில் தொடங்க 200 இளைஞர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 2 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிப்பு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 19, 2022, 11:24 AM IST
  • வேளாண் சார் தொழில் தொடங்க ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி
  • வேளாண் துறை பட்டதாரிகளுக்கு அக்ரி கிளினிக் தொடங்க நிதி உதவி
  • ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
TN agriculture budget 22-23: வேளாண் சார்ந்த தொழில் தொடங்க இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி title=

2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். 

வேளாண்துறைக்கான பல அறிவிப்புகளை, வேளாண் நிதிநிலை அறிக்கையில்வெளியிட்ட அவரின் நிதி ஒதுக்கீடுகளில் பல மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது.

அதில் ஒன்று, வேளாண் சார்ந்த தொழில் தொடங்க 200 இளைஞர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆகும்.

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் இந்த அறிவிப்பு, வேளாண் துறையில் கல்வி பயின்றவர்களுக்கு தொழில் தொடங்க ஊக்கம் அளிக்கும்.

வேளாண் பட்ஜெட் தகவல்களை உடனுக்குன் தெரிந்துக் கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23 நேரலையில் காண இங்கே கிளிக் செய்யவும்

வேளாண் துறையில் பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்படும் என்றும், 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர்களாக உருவாக்க, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகள் படித்த பட்டதாரிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி; ரூ.2 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இளம் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், விவசாயம் சார்ந்த தொழில்களை, வியாபாரமாக மாற்ற ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.

மேலும் படிக்க | தமிழகத்தில் விவசாயத்துக்கான தனி பட்ஜெட் பின்னணி

இதைத் தவிர, கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் ரூ.300 கோடியில் செயல்படுத்தப்படும் என்று இந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 3200 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

முன்னதாக, வேளாண் பட்ஜெட்டுக்காக வினா-விடை நேரத்தை ஒத்திவைக்கும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்

அவை முன்னவர் துரைமுருகன். இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது என்பதால், இன்று வேளாண் பட்ஜெட் தொடர்பான கேள்விகள் நேரம் ஒத்தி வைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனின் முதல் பட்ஜெட் சிறப்பம்சங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News