தற்போது தமிழகத்தில் போராடுபவர்கள் தேச விரோதிகள் - கிருஷ்ணசாமி

Last Updated : Sep 7, 2017, 08:42 PM IST
தற்போது தமிழகத்தில் போராடுபவர்கள் தேச விரோதிகள் - கிருஷ்ணசாமி title=

நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா, கடந்த 1-ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லி பல அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புதிய தமிழகம் கட்சித்த தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை, மாணவி அனிதாவை யாரோ மூளை சலவை செய்து தற்கெலைக்கு தூண்டியிருக்கிறார்கள். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு கொடுத்தார். 

பிறகு அவர் கூறியதாவது, 

அரியலூர் மாணவி அனிதா மூளை சலவை செய்யப்பட்டுதான் தற்கொலை செய்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. தேவைப்படும் போது ஆதாரங்களை சமர்பிப்பேன் எனவும், தமிழகத்தில் தற்போது போராடுபவர்கள் தேச விரோதிகள் என்றும், இவர்கள் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள் என்றும் கூறினார். மேலும் தற்போதிய காலத்திற்கு தந்தை பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
 

Trending News