பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்து : பிரேக் அதிர்ஷ்டத்தால் தப்பிய உயிர்கள் - விடை தெரியாத மர்ம கேள்வி?

Bagmati Express accident, Thiruvallur train mishap : திருவள்ளூர் மைசூரு-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பெரிய உயிர் சேதம் ஏற்படாததற்கு கடைசி நேரத்தில் அடிக்கப்பட்ட லக்கி பிரேக்கே காரணம் என தெரியவந்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 12, 2024, 09:54 AM IST
  • திருவள்ளூர் ரயில் விபத்துக்கு காரணம்
  • கடைசி நேரத்தில் அடிக்கப்பட்ட பிரேக்
  • அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்த உயிர்கள்
பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்து : பிரேக் அதிர்ஷ்டத்தால் தப்பிய உயிர்கள் - விடை தெரியாத மர்ம கேள்வி? title=

திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் வெள்ளிக்கிழமை இரவு பீகார் நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு - தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்தில் சிக்கியது. மெயின் லைனில் சென்று கொண்டிருந்த ரயில் தவறான சிக்னல் காரணமாக லூப் லைனில் சென்றதால் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில் சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டதுடன், பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகளும் தடம் புரண்டன. ரயிலுக்குள் இருந்த பயணிகளும் விபத்தில் சிக்கினர். உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும் 9க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றனர். மற்றவர்களுக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு, விபத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மற்றவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மாற்று ஏற்பாடாக சிறப்பு ரயில் மூலம் எந்த காயமும் அடையாத பயணிகள் சனிக்கிழமை அதிகாலை பீகார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடந்த கவரப்பேட்டையில் இப்போது விபத்தில் சிக்கிய ரயில்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரயில்வே மற்றும் மீட்பு குழுவினர் இணைந்து விபத்தில் தாறுமாறாக கிடக்கும் ரயில் பெட்டிகளை ரயில்வே தொழிற்சாலைக்கு எடுத்துல் செல்லும் பணி நடக்கிறது. விபத்துக்கான காரணத்தை ஆராயும்போது மனித தவறால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். தெற்கு ரயில்வே துறையும் இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஒடிசாவில் ஏற்பட்ட அதே பிரச்சனை திருவள்ளூர் ரயில் விபத்துக்கு காரணமா?

ஒடிசா மாநிலம் பாலசோர் கோர ரயில் விபத்தைப் போலவே இந்த ரயில் விபத்தும் நடந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ரயில்வே துறையினர் பேசும்போது, வழக்கமாக கவரப்பேட்டை பகுதியில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் அதிவேகமாக பயணிக்கும். வளைவுகளில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலும் அப்படி தான் சென்றுள்ளது. ஆனால், மெயின் லைனில் செல்ல வேண்டிசய ரயில் லூப் லைனில் நுழைந்திருக்கிறது. ஒருவேளை பராமரிப்பு பணிகள் நடந்தால் மெயின் லைன் சிக்னல் லூப் லைனுக்கு மாற்றி கொடுக்கப்படும். ஒருவேளை அப்படி ஏதேனும் தவறுகள் நடந்திருக்கிறதா என விசாரிக்க வேண்டியுள்ளது.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால் லூப் லைனில் வழக்கமான வேகத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றிருந்தால் மிகப்பெரிய கோர விபத்து நடந்திருக்கும் ரயில் பெட்டிகள் எல்லாம் சின்னா பின்னமாக போய் இருக்கும். நல்ல வேளையாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 90 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறைத்து, அதனை மேலும் குறைந்து 75 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கியிருக்கிறார்கள். பாக்மதி எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் அப்படி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கடைசி நேரத்தில் இயக்கிய பிரேக்கும் விபத்தை கோரத்தை குறைத்திருக்கிறது. அதனால், அவர்களும் காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார்கள். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டியிருக்கிறது" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | திருவள்ளூர் அருகே ரயில் விபத்து: சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதின.. தீப்பிடித்த பெட்டிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News