திருமாவளவனுக்கு ஆதரவாக டிரெண்டாகும் ஹேஸ்டேக் - காரணம் என்ன?

மழை நீரில் கால் நனையாமல் சென்ற விசிக தலைவர் திருமாவளவன் வீடியோவுக்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவாக டிவிட்டரில் திருமாவைக் கொண்டாடுவோம் என்ற ஹேஷ்டேக் வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 30, 2021, 05:47 PM IST
திருமாவளவனுக்கு ஆதரவாக டிரெண்டாகும் ஹேஸ்டேக் - காரணம் என்ன? title=

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகள் முதல் அடுக்குமாடி குடியிருப்புகள் வரை என அனைத்து இடங்களிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸடாலினும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல், மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும் நேரடியாக சந்தித்து ஆறுதல் அளித்து வருகின்றனர்.

ALSO READ | ரவுடிகள் என்றால் பிராமணர்கள்தான் - எம்.பி. திருமாவளவன் பேச்சு

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மழை நீர் தேங்கியிருக்கும் கட்டடத்தில் இருந்து வெளியேறும்போது, கால் நனையாமல் இருப்பதற்காக தொண்டர்களின் உதவியுடன் இரும்புச் சேரில் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது. உடனடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அந்த வீடியோ கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. சமூகநீதி மற்றும் சமத்துவத்துக்காக குரல் கொடுக்கும் தலைவர், மழை நீரில் கால் நனையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தொண்டர்களை இப்படியா? பயன்படுத்துவது. இது தான் சமூக நீதியா? என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். பா.ஜ.கவைச் சேர்ந்த வினோஜ் பி.செல்வம் தனது டிவிட்டர் பதிவில், திருமாவளவன் (Thirumavalavan) சென்ற வீடியோவை பதிவிட்டு, இது தான் அடங்க மறு! அத்து மீறு என்பதற்கான அர்த்தமா? என விமர்சித்து எழுதியிருந்தார்.

ALSO READ |’பேஸ்புக்ல இருந்தா விபச்சாரி’ பெண்கள் குறித்து சர்ச்சைப்பேச்சு - வீடியோ வைரல் 

இந்த விமர்சனத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். வன்னியரசு கொடுத்துள்ள விளக்கத்தில், வேளச்சேரியில் உள்ள மருதம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் உள்ள ஒரு அறையில் திருமாவளவன், 15 ஆண்டுகளாக தங்கியிருப்பதாகவும், தலைவர் நினைத்தால் சொகுசு ஹோட்டலில் தங்கலாம், ஆனால் தம்பிகளோடே தங்குகிறார். அந்தக் கட்டடத்தில் இருக்கும் மழைநீரில் தலைவரின் கால் நனையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தம்பிகள் செய்த உதவியை பொறுக்காமல் சிலர் வன்மத்துடன் விமர்சிப்பதாக சாடியுள்ளார். இதேபோல், விக்ரமன் வெளியிட்டுள்ள வீடியோவில், திருமாவளவனை விமர்சிப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் எனத் தெரிவித்துள்ளார். அவர்களின் பிரச்சாரத்தை மக்கள் நம்ப மாட்டர்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், அக்கட்சியினர் திருமாவைக் கொண்டாடுவோம் என்ற ஹேஸ்டேக்கில், அவரின் பணிகளை புகழ்ந்து எழுதி வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் டிவிட்டரில் வைரலாகியுள்ளது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News