மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை: SC

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

Last Updated : Nov 27, 2020, 01:11 PM IST
மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை: SC  title=

தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்தாண்டு 50% இடஒதுக்கீடு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளை (Medical Studies) பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 50 சதவீத இட ஒதுக்கீடு (Reservation) மூலம் அரசு மருத்துவர்களுக்கு (Govt Doctors) 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்திற்கு நீதிமன்றத்தின் வாயிலாக பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த முறை கைவிடப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் 190 உயர் சிறப்பு படிப்புகளுக்கான இடங்கள் உள்ளதாகவும், இதனால் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளிலும், மருத்துவ மேற்படிப்புகளிலும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிடக்கோரி அரசு மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இதில், 50% இடஒதுக்கீட்டுக்கான இடங்களை அரசு மருத்துவர்களுக்கு வழங்க என தமிழக அரசு (TN Govt) அரசாணை பிறப்பித்தது. இதற்கு தனியார் மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்நிலையில்,  உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை 50 சதவீத இடங்கள் தமிழகத்தில் அரசு சேவையில் உள்ள மருத்துவா்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ளவை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு (உயா் சிறப்பு படிப்புகள்) மதிப்பெண் அடிப்படையில் மாநில மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழுவே மாணவா் சோ்க்கையை நடத்தும். மாநில ஒதுக்கீட்டின் கீழ் இடங்களைப் பெறும் அரசு மருத்துவா்கள், தாங்கள் பணி ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவப் பணிகளிலேயே நீடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | IIT, NIT-களில் அடுத்த ஆண்டு முதல் தாய் மொழியில் பொறியியல் படிப்புகள்

MD, MS, முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையில் ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி 50 சதவீதம் மாநில ஒதுக்கீட்டுக்கும், 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும். அதில் மாநில ஒதுக்கீட்டுக்கான இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவா்களுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள இடங்கள் பொது இடங்களாக அறிவிக்கப்படுகின்றன. அந்த இடங்களுக்குத் தனியாா் மருத்துவா்களும், அரசு மருத்துவா்களும் போட்டியிடலாம். முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு மருத்துவா்கள், அப்படிப்பை முடித்து சிறப்பு படிப்புகளுக்குச் செல்லும் வரை அரசுப் பணியிலேயே தொடர வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Trending News