திருச்செங்கோட்டில் 51 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச தேரோட்ட திருவிழா

Thaipusam Chariot Festival: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 51 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 5, 2023, 03:37 PM IST
  • முருகப் பெருமானை கொண்டாடப்படும் தைப்பூசம் இன்று.
  • திருச்செங்கோட்டில் 51 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச தேரோட்ட திருவிழா.
திருச்செங்கோட்டில் 51 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச தேரோட்ட திருவிழா title=

தைப்பூச தேரோட்ட திருவிழா: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 51 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விநாயகர் ஆறுமுகசாமி தேவசேனா தேரை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வடம் பிடித்து துவக்கி வைத்தார். காவடி ஆட்டங்களுடன் அரகர கோசங்களோடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பு. மாலை 4 மணி அளவில் கைலாசநாதர், சுகந்த குந்தலாம்பிகை, சோமாஸ்கந்தர் தேர் வடம் பிடிக்க உள்ளனர்.

முன்னதாக கடந்த 51 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூச தேரோட்டம் நிதிபற்றாக்குறை போன்ற சில காரணிகளால் நிறுத்தப்பட்டது இதனை அடுத்து பக்தர்களின் பல ஆண்டு கோரிக்கைகுப் பிறகு கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அறநிலையத் துறை சார்பாக தைப்பூச தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

மேலும் படிக்க | தைப்பூசத்தில் பழனியில் குவிந்த பக்தர்கள்: கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்

இதன்படி கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஆறுமுகசாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது, இதைத் தொடர்ந்து இன்று முதலில் விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது தொடர்ந்து ஆறுமுகசாமி தேவசேனா தேர் இழுக்கப்பட்டது. 

இந்த தேரோட்டத்தில் வனத்துறை அமைச்சர் மதி வேந்தன் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார் பூங்கிரகம் காவடி ஆட்டம் சிவன் பார்வதி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு ஆட்டங்களை பக்தர்கள் தேரோட்டத்தில் ஆடியபடி வந்தனர் திருச்செங்கோடு கிழக்கு ரத வீதியில் துவங்கிய தேரோட்டம் தெற்கு ரத வீதி மேற்கு வடக்கு ரத வீதி வழியாக தேர் இழுக்கப்பட்டு நிலையை வந்தடைந்தது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

51 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட தைப்பூச தேர்த்திருவிழா தற்போதைய தலைமுறை பார்க்காத ஒன்று ஆகவே இளைஞர்களும் பெண்களும் பக்தர்களும் சரண கோஷங்கள் முழங்க மிக ஆர்வத்துடனும் பக்தி பரவசத்துடன் தேரோட்டத்தை கண்டு ரசித்தனர் இன்று மாலை மாலை 4 மணி அளவில் கைலாசநாதர், சுகந்த குந்தலாம்பிகை, சோமாஸ்கந்தர் தேர் வடம் பிடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்க | பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..! ஆன்லைன் மூலம் பிரசாதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News