உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று தொடங்கி தமிழகத்தின் அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ-வாக உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்ற உடனே அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடன் ஓர் ஆண்டாக எந்தவித பொறுப்புகளும் வழங்கப்படாமல் இருந்து வந்தது. கட்சி பணி மற்றும் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்று அதிரகார்வப்பூர்வ தகவல் வெளியானது.
மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்... அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி!
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
- அமைச்சர் மதிவேந்தனிடம் இருந்த சுற்றுலாத்துறை, ராமச்சந்திரனுக்கு மாற்றம்.
- அமைச்சர் சேகர்பாபு வசம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும துறை ஒப்படைப்பு.
- உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒதுக்கீடு.
- கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு.
- அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு.
- சுற்றுச்சூழல் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு இலக்காவை வகித்து வந்த அமைச்சர் மெய்ய நாதனுக்கு சுற்றுச்சூழல் துறையுடன் முன்னாள் ராணுவ வீரர்கள் இலாகா கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது
- அமைச்சர் காந்தியிடம் இருந்த காதி கிராமத்துறை இலாகா அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | அமைச்சரானதும் உதயநிதி ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ