தமிழக அரசின் பூச்சி சின்னமாக 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சியை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது!!
தமிழகத்தின் மாநில சின்னங்களாக வரையாடு, மரகதப்புறா, காந்தள், பனை, பலா ஆகியவற்றை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அந்த வரிசையில் மாநில பூச்சியாக ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சி சேர்க்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் 30-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்களில் ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி இனமும் ஒன்று. இந்த பட்டாம்பூச்சிகள், கூட்டமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம் பெயரும் தன்மை கொண்டவை. இந்த பட்டாம்பூச்சிகள் மஞ்சள் மற்றும் அடர்த்தியான காப்பி கலரில் இருக்கும். இதன் அறிவியல் பெயர் சிர்ரோசோர்ரா தையஸ் ஆகும்.
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் பரிந்துரையை ஏற்று இதுதொடர்பான அரசாணையை அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசின் சின்னமாக ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சியை சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சேர்த்தது.
தமிழகத்தின் சின்னமான தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சி ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்துார் கோயில் கோபுரம், மரகதப்புறா, பனைமரம், வரையாடு போன்றவை உள்ளன. முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வனஉயிரின பாதுகாவலர் பரிந்துரையின்படி தமிழ் மறவன் பட்டாம்பூச்சி இனத்தை மற்றொரு சின்னமாக அறிவித்து, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.